இன்று நினைவு தினம்...சில்க் ஸ்மிதா கடித்த ஆப்பிள்... ஏலத்தில் வாங்கிய ரசிகர்!

நடிகை சில்க் ஸ்மிதா
நடிகை சில்க் ஸ்மிதா

கிறங்கடிக்கும் கண்கள், தேன் தடவிய குரல், பார்ப்போரை சுண்டி இழுக்கும் அழகு இதையெல்லாம் தாண்டி அசாத்திய நடிப்பு திறமை கொண்ட பேரழகி சில்க் ஸ்மிதா. தமிழ் சினிமா அவரின் திறமையை இன்னும் முழுமையாக பயன்படுத்திக் கொண்டிருக்கலாம் என பெருமூச்சு விடாத தமிழ் ரசிகர்கள் இல்லை.

மறைந்து 27 வருடங்கள் கடந்தும் சில்க்கின் அலை இன்னும் ஓயவில்லை. அவரின் நினைவு தினமான இன்று அவர் குறித்தான சில சுவாரஸ்ய தகவல்களை இங்குப் பார்க்கலாம்.

நடிகை சில்க் ஸ்மிதா
நடிகை சில்க் ஸ்மிதா

* சில்க் என்றாலே பலருக்கும் கவர்ச்சி பிம்பம்தான் நினைவுக்கு வரும். அதில் ஸ்மிதாவுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. இந்த கவர்ச்சி இமேஜை முழுமையாக ஏற்றுக் கொள்வீர்களா எனக் கேட்ட போது, ‘நிச்சயமாக! அது என்னுடைய கதாபாத்திரங்களுக்கு கிடைத்த வெற்றிதான்!’ என்றார் சிரித்துக் கொண்டே.

நடிகை சில்க் ஸ்மிதா
நடிகை சில்க் ஸ்மிதா

* சில்க் நடித்தத் திரைப்படங்களில் அவருக்கு குரல் கொடுத்தவர் ஹேமமாலினி. இவரது குரலும் சில்க் குரலும் கிட்டத்தட்ட ஒன்று போலவே இருக்கும். சில்க் குறித்தான அவரது சில பேட்டிகளில், ‘சில்க் பெரும்பாலும் கவர்ச்சி கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும், அவளுக்கு வலுவான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசையும் இருந்தது. ஆனால், திரையுலகம் அவரை கவர்ச்சி பொருளாகவே பெரும்பாலும் பயன்படுத்திக் கொண்டது’ என வருத்தப்பட்டுள்ளார்.

நடிகை சில்க் ஸ்மிதா
நடிகை சில்க் ஸ்மிதா

* ஆந்திராவை பூர்விகமாகக் கொண்ட விஜயலட்சுமியை ‘வண்டிச்சக்கரம்’ படத்தில் சாராயம் விற்கும் ‘சில்க்’காக அறிமுகப்படுத்தியவர் நடிகர் வினுச்சக்ரவர்த்தி. அதில் இருந்து அவரது பெயர் திரையுலகில் சில்க் ஸ்மிதாவானது. ரஜினி, கமல் என அந்த நாட்களில் இவருடன் நடிக்காத முன்னணி கதாநாயகர்களே கிடையாது.

* சில்க் படத்தில் ஒரு பாடலுக்கு மட்டுமே நடனம் ஆடியிருந்தாலும் அவரது படத்தைப் போஸ்டரில் வைத்து விடுவார்கள். சில்க்கை பார்க்கவே ரசிகர்கள் கூட்டம் அலைமோதிய காலம் உண்டு.

நடிகை சில்க் ஸ்மிதா
நடிகை சில்க் ஸ்மிதா

* சில்கிற்கு அவருடைய பெற்றோர் 17 வயதிலேயே புரிதல் இல்லாத சமயத்தில் திருமணம் செய்து வைத்தனர். ஆனால், சில வருடங்களிலேயே அந்த உறவில் இருந்து வெளியே வந்தார் சில்க்.

*படப்பிடிப்பு ஒன்றில் சில்க் ஆப்பிள் ஒன்றை கடித்து விட்டு வைத்துப் போக அதனை அங்கிருந்த ஒருவர் கிட்டத்தட்ட 300 ரூபாய்க்கு ஏலம் விட்டிருக்கிறார்.

நடிகை சில்க் ஸ்மிதா
நடிகை சில்க் ஸ்மிதா

* சினிமாவுக்குள் நுழைந்த 17 வருடத்திலேயே கிட்டத்தட்ட 450-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார் சில்க். அந்த அளவுக்கு பிஸியாக இருந்தவர் பொருளாதார பிரச்சினைகளாலும், ரிலேஷன்ஷிப் தோல்வியாலும் தன்னுடைய 35-வது வயதில் உருக்கமான கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதுதான் பரிதாபம்.

* சில்க்கின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு வித்யாபாலன் நடிப்பில் ’டர்ட்டி பிக்சர்’ என்ற படம் வெளியானது. தற்போது வெளியாகி இருக்கும் ‘மார்க் ஆண்டனி’ படத்திலும் சில்க் போல சாயல் கொண்ட நடிகை விஷ்ணு பிரியா மூலம் மீண்டும் சில்க்கை திரைக்கு கொண்டு வந்திருக்கிறார்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in