வித்தியாசமான புகைப்படங்களை வெளியிட்ட ஸ்ருதிஹாசன்: என்ன காரணம்?

வித்தியாசமான புகைப்படங்களை வெளியிட்ட ஸ்ருதிஹாசன்: என்ன காரணம்?

நடிகை ஸ்ருதிஹாசன் உடல்நிலை சரியில்லாதது போல வெளியிட்டுள்ள புகைப்படங்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஸ்ருதிஹாசன். நடிகையாக மட்டுமல்லாது இசையமைப்பாளராகவும் பாடகராகவும் கவனம் செலுத்தி வருகிறார் ஸ்ருதி. தற்போது தன்னுடைய காதலருடன் மும்பையில் வசித்து வருகிறார். சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் ஸ்ருதிஹாசன். இந்த நிலையில், உடல்நிலை சரியில்லாததது போன்ற புகைப்படங்களை நடிகை ஸ்ருதிஹாசன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் புகைப்படங்களைப் பகிர்ந்து அவர் கூறியிருப்பதாவது, “மிகச் சரியான செல்ஃபிகள் மற்றும் போஸ்ட்களுக்கு மத்தியில், பலரது பார்வைகளுக்கு வராத மோசமான முடி கொண்ட ஒரு நாள், காய்ச்சல், சைனஸ் பிரச்சினைகள் கொண்ட ஒரு நாள், மாதவிடாய் வலிகள் மற்றும் இன்னும் பல பிரச்சினைகள் இருக்கிறது. என்னைப் போலவே நீங்களும் இந்த நாட்களை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவீர்கள் என நம்புகிறேன்” என பதிவிட்டுள்ளார் ஸ்ருதி.

மகிழ்ச்சியான நாட்களைப் போலவே, இதுபோன்ற கடினமான நாட்களையும் பொதுவில் எல்லாருடனும் பகிர்ந்து கொண்டதற்காக ஸ்ருதிஹாசனை ரசிகர்கள் பாராட்டி வருவதுடன் சீக்கிரமே அவர் உடல்நலன் தேறி வரவேண்டும் என்ற வாழ்த்துகளையும் பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in