கணவர் இறந்த சோகம்... வலியை மறக்க பிரபல சீரியல் நடிகை எடுத்த முடிவு!

நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா, அரவிந்த்
நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா, அரவிந்த்

திருமணம் ஆகிய ஒரு வருடத்திற்குள்ளேயே நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியாவின் கணவர் அரவிந்த் திடீர் மாரடைப்பு காரணமாக காலமானது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், கணவரின் பிரிவை மறக்க ஸ்ருதி சண்முகப்பிரியா காட்டுக்குள் பயணம் செய்ய முடிவெடுத்து, சென்று வந்துள்ளார்.

சன் டிவியில் ஒளிபரப்பான ‘நாதஸ்வரம்’ சீரியல் மூலம் பிரபலமான ஸ்ருதி அடுத்தடுத்து வாணி ராணி, கல்யாண பரிசு, பாரதி கண்ணம்மா என தொடர்ந்து சீரியல்கள் நடித்து வந்தார். இவருக்கு கடந்த ஆண்டு மே மாதம் அரவிந்த் சேகர் என்பவருடன் திருமணம் நடைபெற்றது.

திருமணத்திற்கு பின் நடிப்பதையே நிறுத்திய ஸ்ருதி, தனது கணவருடன் அதிக இடங்களுக்கு சுற்றுலா சென்று மகிழ்ச்சியாக அந்த புகைப்படங்களையும், வீடியோக்களையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தார். இந்நிலையில் அரவிந்த் திடீர் மாரடைப்பு காரணமாக இறந்தது சோகத்தை ஏற்படுத்தியது. இதனை அடுத்து, அந்த சோகத்தில் இருந்து வெளியே வந்து மகிழ்ச்சியை தேடி காட்டுக்குள் பயணம் சென்றுள்ளார் ஸ்ருதி.

சமீபத்தில் ஸ்ருதி காட்டுக்குள் சென்றுள்ள வீடியோ, புகைப்படங்கள் ஆகியவற்றை தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார். ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in