அஜித்தின் பிறந்தநாள் பரிசுடன் மாஸாக போஸ் கொடுத்த ஷாமிலி... சூப்பர் வீடியோ!

ஷாமிலி
ஷாமிலி

நடிகர் அஜித்தின் பிறந்தநாளுக்காக அவரது மனைவி ஷாலினி விலையுயர்ந்த பைக் ஒன்றை பரிசாகக் கொடுத்தார். இந்த பைக்குடன் ஷாமிலி செம மாஸாக போஸ் கொடுத்திருக்கிறார்.

நடிகர் அஜித் தன்னுடைய பிறந்தநாளை நண்பர்கள், உறவினர்களுடன் சென்னை நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் கடந்த மே 1 அன்று கொண்டாடினார். இந்தப் புகைப்படங்களும், வீடியோக்களும் அப்போது இணையத்தில் வைரலானது. பைக் பிரியரான அஜித்தின் 53வது பிறந்தநாளுக்காக அவரது மனைவி ஷாலினி விலையுயர்ந்த டுகாட்டி பைக் ஒன்றையும் பரிசளித்திருந்தார்.

இந்த பைக்குடன் ஷாலினியின் தங்கை ஷாமிலி செம மாஸாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அஜித்தின் பிறந்தநாளுக்காக கருப்பு நிற தீம் பிளான் செய்திருக்கிறார்கள். இந்த மேடையில் நின்றுதான் ஷாமிலி கூலாக போஸ் கொடுத்திருக்கிறார்.

ஷாலினியைப் போலவே ஷாமிலியும் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்திருக்கிறார். தெலுங்கு மற்றும் தமிழில் சில படங்கள் கதாநாயகியாக நடித்திருந்தாலும், அவர் சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டு தற்போது ஓவியங்கள் வரைவதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

அஜித் பிறந்தநாள் விழாவில்
அஜித் பிறந்தநாள் விழாவில்

நடிகர் அஜித் ‘விடாமுயற்சி’, ‘குட் பேட் அக்லி’ ஆகிய படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இதுதவிர, தனது வீனஸ் மோட்டோ சைக்கிள் நிறுவனத்தையும் அடுத்தக் கட்டத்திற்கு எடுத்து செல்ல முனைப்பு காட்டி வருகிறார்.

இதையும் வாசிக்கலாமே...

சவுக்கு சங்கர் வழக்கு... பெலிக்ஸ் ஜெரால்ட் கோவை நீதிமன்றத்தில் ஆஜர்!

ஓடுபாதையில் விமானம் மீது மோதிய டிரக்; உயிர் தப்பிய 180 பயணிகள்; புனேவில் பரபரப்பு!

கையில் கட்டுடன், கேன்ஸ் ரெட் கார்ப்பெட்டில் கவனம் ஈர்த்த ஐஸ்வர்யா ராய்!

பெரும்பான்மை கிடைக்கலைன்னா பாஜகவின் ‘பிளான் பி’ என்ன? - அமித் ஷா அட்டகாச பதில்!

அஞ்சலி கொலையில் திடீர் திருப்பம்... ஓடும் ரயிலிலிருந்து குதித்த குற்றவாளி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in