`பிறந்தநாள் வாழ்த்துகள் என் காதலே'- நடிகர் ஆர்யாவை உருக வைத்த சாயிஷா!

`பிறந்தநாள் வாழ்த்துகள் என் காதலே'- நடிகர் ஆர்யாவை உருக வைத்த சாயிஷா!

நடிகர் ஆர்யாவின் பிறந்தநாளன்று நடிகை ஆயிஷா கொடுத்துள்ள சர்ப்ரைஸ் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

நடிகர் ஆர்யாவுக்கு சாயிஷாவுக்கும் திருமணம் கடந்த 2019-ல் நடந்தது. நேற்று நடிகர் ஆர்யா தன்னுடைய 42-வது பிறந்தநாளைக் கொண்டாடினார். இதனை ஒட்டி முத்தையா இயக்கத்தில் அவர் அடுத்து நடிக்க இருக்கும் திரைப்படமான ‘காட்ஃபாதர் என்கிற முத்துராமலிங்கம்’ படத்தின் முதல் பார்வை வெளியிடப்பட்டது. ரசிகர்களும் திரையுலகப் பிரபலங்களும் இவருக்கு தங்களது பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் நடிகை சாயிஷா தன் கணவர் ஆர்யாவுக்கு, ‘பிறந்தநாள் வாழ்த்துகள் என் காதலே! நீங்கள் எப்போதுமே மிகச்சிறந்த கணவர், அப்பா, மகன் மற்றும் நல்ல மனிதர். எங்கள் வாழ்க்கையில் நீங்கள் வருவதற்கு நாங்கள் ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறோம். நீங்கள் என்னுடையதாக இருப்பதற்கு நன்றி. உங்களை நான் எப்போதுமே காதலிக்கிறேன்’ என தன்னுடைய அன்பை பகிர்ந்துள்ளார் சாயிஷா. இதுமட்டுமல்லாது, ஆர்யா- சாயிஷாவின் பெண் குழந்தை புகைப்படமும் ஆர்யா பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இருந்து வெளியாகியுள்ளது.

இந்தப் புகைப்படம் ரசிகர்களிடையே தற்போது வைரலாகி வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in