தங்கை திருமணத்தன்று அக்காவுக்கு ஆண் குழந்தை: கொண்டாட்டத்தில் நடிகை குடும்பம்!

தங்கை திருமணத்தன்று அக்காவுக்கு ஆண் குழந்தை: கொண்டாட்டத்தில் நடிகை குடும்பம்!

தங்கையின் திருமணத்தன்று நடிகையின் அக்காவுக்கு அழகான ஆண்குழந்தை பிறந்துள்ளது.

பிரபல கன்னட நடிகை சஞ்சனா கல்ராணி. இவர் தமிழில் 'ஒரு காதல் செய்வீர்' என்ற படத்தில் அர்ச்சனா கல்ராணி என்ற பெயரில் நாயகியாக நடித்துள்ளார். கன்னடம், தெலுங்கு படங்களில் நடித்து வரும் சஞ்சனா, நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரி.

நடிகை சஞ்சனாவுக்கும் டாக்டர் அசீஷ் பாஷா என்பவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன் திருமணமானது. ஆனால், அதை வெளிப்படையாக அவர்கள் அறிவிக்கவில்லை. நடிகை சஞ்சனா, போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட போது இந்த விவகாரம் வெளிவந்தது. இந்த வழக்கில் சஞ்சனா ஜாமீனில் வெளிவந்துள்ளார்.

இந்நிலையில், சஞ்சனா நிறைமாதக் கர்ப்பிணியாக இருந்தார். அவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. இந்நிலையில், அவருக்கு இன்று அழகான ஆண்குழந்தை பிறந்துள்ளது. இதை அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.

கணவர் அசீஷ் பாஷாவுடன் நடிகை சஞ்சனா கல்ராணி
கணவர் அசீஷ் பாஷாவுடன் நடிகை சஞ்சனா கல்ராணி

சஞ்சனாவின் தங்கை நடிகை நிக்கி கல்ராணிக்கு இன்று அதிகாலையில் நடிகர் ஆதியுடன் சென்னையில் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில், அக்காவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதால் அவர் குடும்பத்தினர் மகிழ்ச்சியில் உள்ளனர். சமூக வலைதளங்களில் ரசிகர்களும், திரையுலகினரும் சஞ்சனாவுக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in