‘கட்சி சேர’ பாடல் நடிகைக்கு என்னாச்சு... காயத்துடன் இருக்கும் புகைப்படங்களைப் பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி!

’கட்சி சேர...’ பாடலில் சம்யுக்தா
’கட்சி சேர...’ பாடலில் சம்யுக்தா

சமூகவலைதளத்தில் ‘கட்சி சேர’ பாடல் மூலம் டிரெண்டானவர் சம்யுக்தா விஸ்வநாத். இவர் எதிர்பாராத விதமாக விபத்து ஒன்றில் சிக்கியிருக்கிறார். விபத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருக்கும் அவரது புகைப்படங்களைப் பார்த்துவிட்டு ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மருத்துவமனையில் சம்யுக்தா...
மருத்துவமனையில் சம்யுக்தா...

சமூகவலைதளத்தில் எந்த விஷயம் எப்போது டிரெண்டாகும் என்பதைக் கணிக்க முடியாது. அப்படி சமீபத்தில் வெளியான ‘கட்சி சேர...’ என்ற தனியிசைப் பாடல் மூலம் டிரெண்டானவர் நடிகை சம்யுக்தா விஸ்வநாத். இவரின் நடன அசைவுகள் ரசிகர்களை உடனே கவர, பாடலும் இணையத்தில் டிரெண்டானது. இளசுகள் பலரும் இந்தப் பாடலுக்கு நடனம் ஆடி ரீல்ஸை இணையத்தில் பகிர்ந்தனர்.

இந்தப் பாடல் மூலம் கிடைத்த புகழை வைத்து சம்யுக்தா தமிழில் ‘சுழல்2’ வெப்சீரிஸ் மற்றும் தெலுங்கில் ஒரு சில படங்களிலும் நடிக்க ஒப்பந்தமானார். இதற்கு முன்பு தெலுங்கில் ‘சாரி 111’ படம் மூலம் அறிமுகமானவர் இவர்.

இப்படியான சூழ்நிலையில்தான் அவர் எதிர்பாராத விபத்து ஒன்றில் சிக்கியுள்ளார். இந்த விபத்தில் அவரது மூக்கு, தாடைப் பகுதியில் கடுமையாக அடிபட்டிருக்கிறது. விபத்து எப்போது, எப்படி நடந்தது என்பது போன்ற விவரங்களை அவர் குறிப்பிடவில்லை.

மருத்துவமனையில் காயத்துடன் படுத்த படுக்கையாக சம்யுக்தா இருக்கும் இந்தப் புகைப்படங்களைப் பார்த்துவிட்டு ரசிகர்கள் அதிர்ச்சி ஆகி இருக்கின்றனர். சீக்கிரம் அவர் குணமடைந்து திரும்பி ஆக்டிவாக இருக்க வேண்டும் என கூறி வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...    

வரலாற்றில் உச்சம்... ரூ.51,000யைக் கடந்தது சவரன் விலை... ஒரே நாளில் ரூ.1,120 உயர்வு!

தேவாலய ஆராதனைக்குச் சென்றபோது ஆற்றுக்குள் கவிழ்ந்த பேருந்து... 45 பேர் பலியான பரிதாபம்!

அதிர்ச்சி... சென்னை தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்!

பள்ளி இறுதித்தேர்வு தேதியில் திடீர் மாற்றம்... ரமலான் பண்டிகையை முன்னிட்டு நடவடிக்கை!

அடுத்த தோனி இவர் தான்... தோனியே புகழ்ந்த அந்த நபர் இவரா?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in