நடிகை சமந்தா வெளியிட்ட அவரது புகைப்படங்களால் ரசிகர்கள் கலக்கம்

நடிகை சமந்தா வெளியிட்ட அவரது புகைப்படங்களால் ரசிகர்கள் கலக்கம்

நடிகை சமந்தா 'யசோதா' திரைப்பட புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். இதற்காக அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படங்களைப் பார்த்து அவரது ரசிகர்கள் கண் கலங்கிப் போய் உள்ளனர்.

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடிய நடிகைகளில் இவரும் ஒருவர். கடந்த சில மாதங்களாகவே சமூக வலைதளங்களில் இருந்து ஒதுங்கி இருந்தார் சமந்தா. இதற்குக் காரணமாக, பல தகவல்கள் வெளிவந்தாலும் சமந்தா தரப்பில் மெளனமாகவே இருந்தனர். இந்த நிலையில், சமந்தா நடித்த ‘யசோதா’ திரைப்படம் நவ. 11-ம் தேதி வெளியாக உள்ளது. இந்த படம் குறித்தான பதிவுகளை மட்டும் அவ்வப்போது பகிர்ந்த வந்த சமந்தா, இந்தப் படத்தின் டிரைலருக்கு பார்வையாளர்கள் தந்த ஆதரவுக்கு நன்றி தெரிவித்துடன் ஒரு தகவலைத் தெரிவித்தார்.

அவர் தெரிவித்த தகவலால் திரையுலகமே அதிர்ச்சியைடந்தது. அதில்," கடந்த சில மாதங்களுக்கு முன்னால் நான் ஆட்டோ இம்யூன் என்றழைக்கப்படும் மயோஸிடிஸ் (Myositis) நோயால் பாதிக்கப்பட்டேன். இது சீக்கிரம் சரியானதும் உங்கள் அனைவரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், நான் நினைத்ததை விடவும் சரியாவதற்கு அதிக காலம் எடுத்துக் கொள்கிறது. அதீத நம்பிக்கை எதன் மீதும் வைக்கக் கூடாது என்பதை நான் உணர்ந்து வருகிறேன். இந்தப் பாதிப்புடன் நான் போராடிக் கொண்டிருக்கிறேன் என்பதை நான் ஒத்துக் கொள்ளதான் வேண்டும். நான் முழுமையாக சீக்கிரம் சரியாகிவிடுவேன் என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

அத்துடன், " உடல்ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் நான் நல்ல நாட்களையும் மோசமான நாட்களையும் எதிர்கொண்டுள்ளேன். இருந்தாலும், இதற்கு மேலும் என்னால் ஒருநாள் கூட நகர்த்த முடியாது என்று தோன்றினாலும் அப்படியே நேரம் நகர்ந்து கொண்டு இருக்கிறது. சீக்கிரம் நான் குணமடையும் காலம் வரும் என்று நினைக்கிறேன். ஐ லவ் யூ! இதுவும் கடந்து போகும்" என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், தற்போது 'யசோதா' படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நடிகை சமந்தா தயாராகி வருகிறார். இதற்காக அவர் தயாராக இருக்கும் புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ளார். கருப்பு உடை அணிந்த அந்த புகைப்படங்களில் சமந்தா வாடிய முகத்துடன் இருப்பதைக் கண்டு அவரது ரசிகர்கள் கண் கலங்கிப் போய் உள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in