கடுப்பேற்றிய ரசிகர்; பதிலடி கொடுத்த சமந்தா!

நடிகை சமந்தா
நடிகை சமந்தா

கடுப்பேற்றிய ரசிகருக்கு நடிகை சமந்தா பதிலடி கொடுத்துள்ளார்.

கடந்த வாரம் ‘ராங்கி’, ‘டிரைவர் ஜமுனா’, ‘செம்பி’, ‘கனெக்ட்’, ‘ஓ மை கோஸ்ட்’ என பெண் கதாபாத்திரங்களுக்கு முன்னிலைப்படுத்தும் திரைப்படங்கள் வெளியாகின. இந்த திரைப்படங்கள் அவற்றின் கதையாக்காக நல்ல வரவேற்பையும் பெற்று வருகின்றன.

இந்த படங்களின் பேனர்களை ஒன்றாக புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றி தமிழ் சினிமா ’பிரம்மிக்கத்தக்க முன்னேற்றப் பாதையில் பயணித்து வருகிறது. பத்து வருடங்களுக்கு முன்னால் இதெல்லாம் நினைத்துப் பார்க்கவே முடியாத அளவுக்கு இருந்தது’ எனப் பகிர்ந்திருக்கிறார் பதிவர் ஒருவர்.

இதைப் பகிர்ந்து நடிகை சமந்தா ‘வுமன் ரைசிங்’ என குறிப்பிட்டுள்ளார். இதற்கு ஒருவர் ‘ஆமாம்! பெண்கள் எழுவது விழுவதற்காகதான்’ என நெகட்டிவாக கமெண்ட் செய்ய, அவருக்கு நடிகை சமந்தா பதிலடி தந்திருந்தார். அந்த பதிலில், ’விழுந்து மீண்டும் எழுவது, இன்னும் வலிமையாக்கும் என் இனிய நண்பரே’ என சமந்தா தெரிவித்திருக்கிறார்.

நடிகை சமந்தா, தேவ் மோகன் நடித்திருக்கக்கூடிய ‘சாகுந்தலம்’ திரைப்படம் பிப்ரவரி 17ம் தேதி திரையரங்குகளில் 3டி-யில் உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. இதற்காக சமந்தாவுக்கு வாழ்த்து தெரிவித்து அவர் உடல் நலன் விரைவில் குணமடைய வேண்டும் எனவும், ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அவர்களுக்கு மத்தியில் இம்மாதிரி பதிலடி களமாடலையும் சமந்தா தொடர்ந்து வருகிறார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in