காஷ்மீர் பெண் ஆகிறார் சமந்தா

காஷ்மீர் பெண் ஆகிறார் சமந்தா

நடிகை சமந்தா தனது அடுத்த படத்தில் காஷ்மீரைச் சேர்ந்த பெண்ணாக நடிக்க இருக்கிறார்.

’காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தை முடித்துள்ள நடிகை சமந்தா, அடுத்து சாகுந்தலம் படத்தையும் முடித்துவிட்டார். இதன் டப்பிங் பணி சமீபத்தில் நிறைவடைந்ததாக அவர் கூறியிருந்தார். இப்போது ’யசோதா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். ஹாலிவுட் படமான அரேஞ்ச்மெண்ட்ஸ் ஆப் லவ் என்ற படத்திலும் நடிக்க இருக்கிறார்.

இதற்கிடையே தெலுங்கு, தமிழில் உருவாகும் மற்றொரு படத்திலும் அவர் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இதில் விஜய் தேவரகொண்டா ஹீரோவாக நடிக்கிறார். சமந்தா, நாக சைதன்யா நடித்த மஜ்லி, நானி நடித்த நின்னுக்கோரி, டக் ஜகதீஷ் ஆகிய படங்களை இயக்கிய சிவா நிர்வாணா இயக்குகிறார்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டா ராணுவ வீரராக நடிக்கிறார். சமந்தா, காஷ்மீரைச் சேர்ந்த பெண்ணாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இதன் படப்பிடிப்பு விரைவில் காஷ்மீரில் தொடங்க இருக்கிறது.

துல்கர் சல்மான் நடிக்கும் நேரடி தெலுங்கு படமான ’சீதா ராமம்’ படத்தில் ராஷ்மிகா மந்தனா, காஷ்மீரி பெண்ணாக நடிப்பதாக அறிவித்திருந்தனர். துல்கர், ராணுவ வீரராக நடிப்பதாகவும் கூறப்பட்டது. இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் உருவாகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in