உங்களுக்கு அறிவு இல்லையா... கேள்விக்கேட்ட ரசிகரை கடுமையாக திட்டித் தீர்த்த சமந்தா!

சமந்தா
சமந்தா
Updated on
1 min read

உங்களுக்கு அறிவு இல்லையா என நடிகை சமந்தா கேள்வி கேட்டுள்ள ரசிகரைத் திட்டியுள்ளார்.

நடிகை சமந்தா சினிமாவுக்கு சிறிய பிரேக் விட்டு தற்போது மையோசிடிஸ் நோய்க்காகத் தீவிர சிகிச்சை எடுத்து வருகிறார். இதற்காக தற்போது வெளிநாட்டில் இருந்து வரும் சமந்தா அங்கிருந்து தொடர்ந்து புகைப்படங்களையும் வீடியோக்களையும் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.

மேலும் அவ்வப்போது ரசிகர்களுடன் சமூக வலைதளத்தில் உரையாடியும் வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் ரசிகர் ஒருவர் சமந்தாவிடம் கேட்டுள்ள கேள்வி அவரைக் கோபப்படுத்தியுள்ளது.

நாகசைதன்யா - சமந்தா
நாகசைதன்யா - சமந்தா

சமந்தாவிடம் சாஷா என்ற செல்ல நாய்க்குட்டி உள்ளது. சமந்தா, நாகசைதன்யா இருவரும் திருமண உறவில் இருந்தபோதே இந்த நாய்க்குட்டியை செல்லமாக வளர்த்து வந்தனர். ஆனால், இப்போது இருவரும் விவாகரத்துப் பெற்று பிரிந்து வாழும் நிலையில் இந்த சாஷா நாய்க்குட்டி சமந்தாவிடம்தான் வளர்ந்து வருகிறது.

இந்த நிலையில் நாகசைதன்யா தனது ஊழியர் வாங்கிய பைக்கை ஓட்டிப்பார்க்கும் வீடியோ ஒன்று வெளியானது. இந்த வீடியோவில் எதிர்பாராமல் சாஷா வகை நாய்க்குட்டியும் இருக்க அதைப் பார்த்த ரசிகர் ஒருவர் மீண்டும் நாகசைதன்யாவுடன் இணைந்து விட்டீர்களா எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த கேள்விதான் சமந்தாவை கோபப்படுத்தியுள்ளது. ரசிகரின் இந்தக் கேள்விக்கு பதிலடி கொடுக்கும் விதமாக சமந்தா, ’உங்களுக்கு அறிவு இல்லையா? வேலையில்லாமல் இருக்கிறீர்களா? சும்மா இருந்தால் தயவு செய்து ஏதாவது புத்தகத்தை எடுத்து படியுங்கள் அறிவாவது வளரும்' என்று கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in