பிரபல ஹீரோ படத்தை நிராகரித்த சமந்தா: பின்னணி என்ன?

பிரபல ஹீரோ படத்தை நிராகரித்த சமந்தா: பின்னணி என்ன?

நடிகை சமந்தா, இப்போது ’ஷாகுந்தலம்’, ’யசோதா’ படங்களில் நடித்துள்ளார். அடுத்து விஜய் தேவரகொண்டாவுடன் ’குஷி’ படத்தில் நடித்து வருகிறார். ராஜ் மற்றும் டீகே இயக்கும் வெப் தொடர் ஒன்றில் வருண் தவானுடன் நடித்து வருகிறார்.

அத்துடன் தெலுங்கு இயக்குநர் கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்டிஆருடன் சமந்தா நடிக்கும் படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்க இருக்கிறது.

கொரட்டலா சிவா, இதற்கு முன் சிரஞ்சீவி நடித்த ’ஆச்சார்யா’ படத்தை இயக்கியிருந்தார். அந்தப் படம் தோல்வியைச் சந்தித்ததால், இந்தப் படத்தின் படப்பிடிப்பு தாமதமாகத் தொடங்குகிறது. இந்நிலையில் இந்தப் படத்திலிருந்து சமந்தா விலகியிருக்கிறார்.

என்ன காரணம்?

இதில் ஹீரோயினாக நடிக்க, சமந்தாவிடம் பேசி வந்தனர். அவருக்கு ரூ.2 கோடி சம்பளம் தர முன் வந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், ரூ.4 கோடி வேண்டும் என்று சமந்தா கேட்டதாகவும் அதற்குத் தயாரிப்பாளர் ஒப்புக்கொள்ளாததால், அந்தப் படத்தில் அவர் விலகிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கெனவே, இந்தப் படத்தில் இருந்து பாலிவுட் நடிகை ஆலியா பட் விலகியது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in