தசைவீக்க நோயால் அவதிப்படும் நடிகை சமந்தா: மேல் சிகிச்சைக்கு தென்கொரியா போகிறார்

தசைவீக்க நோயால் அவதிப்படும் நடிகை சமந்தா: மேல் சிகிச்சைக்கு தென்கொரியா போகிறார்

'மயோசிடிஸ்' எனப்படும் தசைவீக்க நோயால் பாதிக்கப்பட்டுள்ள நடிகை சமந்தா மேல் சிகிச்சை பெற தென்கொரியாவிற்கு செல்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் பிறந்து வளர்ந்த நடிகை சமந்தா, மாடலிங் துறையில் இருந்து திரைத்துறையில் பிரவேசித்தார். நடிகர் விஜய், சூர்யா, விஜய் சேதுபதி உள்பட முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடியாக நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு படங்களிலும் பயணப்பட்ட சமந்தா அங்கு முன்னணி நடிகையாக மாறினார். அத்துடன் பாலிவுட், ஹாலிவுட் படங்களில் நடிக்கவும் அவருக்கு வாய்ப்பு வந்தது.

இந்த நிலையில், 'மயோசிடிஸ்' எனப்படும் தசைவீக்க நோயால் நடிகை சமந்தா தற்போது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக அவர் மேல் சிகிச்சைக்காக தென் கொரியா பயணம் செய்ய இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. இதன் காரணமாக பாலிவுட் பட வாய்ப்புகளை அவர் நிராகரித்து விட்டதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in