மேல் சிகிச்சை பெற வெளிநாடு செல்கிறார் நடிகை சமந்தா

மேல் சிகிச்சை பெற வெளிநாடு செல்கிறார் நடிகை சமந்தா

தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ள நடிகை சமந்தா சிகிச்சை பெற வெளிநாடு செல்ல உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையானசமந்தா, தெலுங்கு முன்னணி நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த ஆண்டு இவர்கள் இருவரும் விவகாரத்து செய்து பிரிந்து விட்டனர். இதனால் ரசிகர்களும், சினிமாத்துறையினரும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனையடுத்து, தன்னுடைய பெயருக்கு பின்னால் இருக்கும் கணவர் பெயரான நாகசைதன்யாவை சமந்தா நீக்கினார். இதன் பின் திரைப்படங்களில் சமந்தா பிஸியானார். இந்த நிலையில் ஆட்டோ இம்யூன் என்றழைக்கப்படும் தசை அழற்சி நோயால் நடிகை சமந்தா பாதிக்கப்பட்டார். இந்த நிலையில் கடந்த 11-ம் தேதி நடிகை சமந்தா நடித்த ‘யசோதா’ திரைப்படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்த சூழ்நிலையில், நடிகை சமந்தா உடல்நிலை மிகவும் மோசமடைந்து, ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால், அது வதந்தி என தெரிந்தது.

இந்த நிலையில் நடிகை சமந்தா ஆயுதர்வேத சிகிச்சை பெற்று வருவதாக நேற்று செய்தி வெளியானது. சமந்தா, மேல்சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல இருப்பதாக தற்போது தெலுங்கு மீடியாக்களில் செய்தி வெளியாகியுள்ளது. இதற்காக சமந்தா, தென்கொரியா நாட்டிற்குச் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in