மீண்டும் சமூக வலைதளத்தில் ஆக்டிவான நடிகை சமந்தா

மீண்டும் சமூக வலைதளத்தில் ஆக்டிவான நடிகை சமந்தா

நடிகை சமந்தா மீண்டும் சமூக வலைதளத்திற்கு வந்திருக்கிறார்.

சமூக வலைதளங்களில் சினிமா பிரபலங்கள் பலரும் ஆக்டிவாக இருந்து வருகின்றனர். தங்கள் நடிக்கும் படம் குறித்தான பதிவுகள் பகிர்வது, தங்களுடைய சொந்த விஷயங்கள் இதுமட்டுமல்லாமல் சமூகவலைதளங்களைப் பயன்படுத்தி விளம்பரங்கள் மூலம் வருவாய் ஈட்டுவது என செயல்பட்டு வருகின்றனர். இதில் நடிகை சமந்தாவும் முக்கியமானவர்.

இவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டும் கிட்டத்தட்ட 20 மில்லியனுக்கும் அதிகமானோர் பின் தொடர்கிறார்கள். நடிகர் நாகசைதன்யாவுடனான திருமண முறிவுக்கு பிறகு கூட, சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்தார் சமந்தா.

ஆனால், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சமூக வலைதளங்களில் எந்த பதிவுகளும் இல்லாமல் அமைதியாக இருந்தார் சமந்தா. இதனையடுத்து சமந்தாவிற்கு தோல் தொடர்பான பிரச்சினைகள் காரணமாக சிகிச்சையில் இருக்கிறார், தமிழ் சினிமாவில் அதிக படங்கள் நடிக்க திட்டமிட்டு இருப்பதால் சென்னையில் வீடு பணிகளை மேற்பார்வை செய்து வருகிறார் என பல செய்திகள் வெளியானது.

இதில் அவருக்கு தோல் தொடர்பான பிரச்சினைகள் எதுவும் இல்லை என அவரது மேலாளர் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் உறுதி செய்தார். இடையில், ‘யசோதா’ படம் தொடர்பான போஸ்டர்களை மட்டுமே பகிர்ந்திருந்தார் சமந்தா.

தற்போது மீண்டும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாகி இருக்கிறார் சமந்தா. ‘நீங்கள் எப்போதும் தனியாக இருக்க முடியாது’ என பொருள்படும்படியான ஆங்கில வாசகம் கொண்ட டீ-ஷர்ட் ஒன்றை அணிந்திருக்கும்படியான புகைப்படத்தைப் பகிர்ந்து ‘இது உங்களுக்கும்தான்’ என்ற கேப்ஷனுடன் பகிர்ந்திருக்கிறார் சமந்தா. இதனையடுத்து ரசிகர்கள், சினிமாத் துறையை சேர்ந்த பிரபலங்கள் என பலரும் சமந்தாவை மீண்டும் சமூக வலைதளத்திற்கு வரவேற்று தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in