ஆட்டோ இம்யூன் நோயால் பாதிக்கப்பட்ட நடிகை சமந்தா!

ஆட்டோ இம்யூன் நோயால் பாதிக்கப்பட்ட நடிகை சமந்தா!

ஆட்டோ இம்யூன் நோயால் தான் பாதிக்கப்பட்டுள்ளதாக நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடிய நடிகைகளில் இவரும் ஒருவர். கடந்த சில மாதங்களாகவே சமூக வலைதளங்களில் இருந்து ஒதுங்கி இருந்தார் சமந்தா. இதற்குக் காரணமாக, பல தகவல்கள் வெளிவந்தாலும் சமந்தா தரப்பில் மெளனமாகவே இருந்தனர். இந்த நிலையில், தற்போது சமந்தாவின் ‘யசோதா’ திரைப்படம் அடுத்த மாதம் 11ம் தேதி வெளியாக இருக்கிறது.

படம் குறித்தான பதிவுகளை மட்டும் அவ்வப்போது பகிர்ந்த வந்த சமந்தா, இந்தப் படத்தின் டிரைலருக்கு பார்வையாளர்கள் தந்த ஆதரவுக்கு நன்றி தெரிவித்து மவுனம் கலைத்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது, ‘நீங்கள் எப்போதும் எனக்குக் கொடுக்கும் அன்பும் ஆதரவும் மட்டும்தான் வாழ்க்கை எப்போதெல்லாம் எனக்குக் கடினமான சவால்களைத் தருகிறதோ அதிலிருந்து மீளும் கருவியாக அமைந்திருக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்னால் நான் ஆட்டோ இம்யூன் என்றழைக்கப்படும் மயோஸிடிஸ் (Myositis) நோயால் பாதிக்கப்பட்டேன்.

இது சீக்கிரம் சரியானதும் உங்கள் அனைவரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், நான் நினைத்ததை விடவும் சரியாவதற்கு அதிக காலம் எடுத்துக் கொள்கிறது. அதீத நம்பிக்கை எதன் மீதும் வைக்கக் கூடாது என்பதை நான் உணர்ந்து வருகிறேன். இந்தப் பாதிப்புடன் நான் போராடிக் கொண்டிருக்கிறேன் என்பதை நான் ஒத்துக் கொள்ளதான் வேண்டும். நான் முழுமையாக சீக்கிரம் சரியாகிவிடுவேன் என மருத்துவர்கள் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளனர்.

உடல்ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் நான் நல்ல நாட்களையும் மோசமான நாட்களையும் எதிர்கொண்டுள்ளேன். இருந்தாலும், இதற்கு மேலும் என்னால் ஒருநாள் கூட நகர்த்த முடியாது என்று தோன்றினாலும் அப்படியே நேரம் நகர்ந்து கொண்டு இருக்கிறது. சீக்கிரம் நான் குணமடையும் காலம் வரும் என்று நினைக்கிறேன். ஐ லவ் யூ! இதுவும் கடந்து போகும்’ என உணர்ச்சிகரமான பதிவை பகிர்ந்து குளுக்கோஸ் ஏற்றியபடி பட டப்பிங்கிற்காக ஸ்டுடியோவில் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார் சமந்தா.

சமந்தா சீக்கிரம் சரியாக வேண்டும் என திரையுலகைச் சேர்ந்தவர்களும் அவரது ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in