சமந்தாவுடன் சின்னத்திரை நடிகர் பிரதோஷ்
சமந்தாவுடன் சின்னத்திரை நடிகர் பிரதோஷ்

நடிகை சமந்தாவிடம் 11 வருட காதலை வெளிப்படுத்திய சீரியல் நடிகர்!... வைரலாகும் வீடியோ

நடிகை சமந்தாவிடம் தனது 11 வருட காதலை தமிழ் சீரியல் நடிகர் வெளிப்படுத்தியுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

நடிகை சமந்தா மையோசிடிஸ் சிகிச்சைக்காக தற்போது அமெரிக்காவில் உள்ளார். விஜய்தேவரகொண்டா, சமந்தா நடிப்பில் ‘குஷி’ திரைப்படம் செப்டம்பர் மாதம் வெளியாகவுள்ளது. இந்தப் படத்திற்கான புரோமோஷன் கடந்த வாரத்தில் நடைபெற்றது. தெலங்கனா மாநிலம், ஹைதராபாத்தில் நடந்த இந்த நிகழ்வில் இன்ஸ்டா பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். இதில் ‘ராஜா ராணி 2’ சீரியல் நடிகர் பிரதோஷூம் கலந்து கொண்டு சமந்தாவிடம் தன்னுடைய காதலை வெளிப்படுத்தினார்.

சமந்தாவை பார்த்தது குறித்து அவர் இன்ஸ்டாவில், " இந்த உலகம் அழகான ஒரு நினைவை என்னுடைய வாழ்வில் கொடுத்துள்ளது. சமந்தா மீது 11 வருட காதல் எனக்கு. சமந்தாவுக்காக எவ்வளவு பேர் வந்தாலும் நானும் சட்டையைக் கிழிச்சுட்டு சண்டைக்கு வருவேன்" என பதிவிட்டு சமந்தாவின் உடல்நலனுக்காகவும் தனது பிரார்த்தனையைத் தெரிவித்துள்ளார்.

x
காமதேனு
kamadenu.hindutamil.in