பெண்கள் தங்கள் நலனைப் பற்றி சிந்திப்பது சுயநலன் கிடையாது... நடிகை சமந்தா பேச்சு!

நிகழ்ச்சியில் நடிகை சமந்தா
நிகழ்ச்சியில் நடிகை சமந்தா

"பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவதை சுயநலமாகக் கருதக் கூடாது” என நடிகை சமந்தா பேசியுள்ளார்.

மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சை எடுத்து வருகிறார் நடிகை சமந்தா. இந்த நோய் குறித்து அவர் வெளிப்படையாக பொதுவெளியில் சொன்ன பிறகு அதற்கு எடுத்து வரும் சிகிச்சை பற்றியும் தொடர்ந்து தனது சமூகவலைதளம் மூலம் பகிர்ந்து வருகிறார்.

மேலும், உடல் ஆரோக்கியம் குறித்து தனது நண்பர், ஊட்டச்சத்து நிபுணர் அல்கேஷூடன் இணைந்து பாட்காஸ்ட் ஒன்றையும் தொடங்கி இருக்கிறார் சமந்தா.

நடிகை சமந்தா
நடிகை சமந்தா

சமீபத்தில் இயற்கை முறையில் சுற்றுசூழலுக்கு பாதிப்பில்லாத வாழ்வியலை முன்னெடுப்பதற்காக வார இதழ் ஒன்று அவருக்கு விருதும் வழங்கியது. இப்படியான சூழ்நிலையில்தான், "பெண்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது சுயநலன் கிடையாது" என்று பேசியுள்ளார் சமந்தா.

நேற்று சென்னை சத்யபாமா இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி பல்கலைக்கழகத்தில் பெண்கள் மேம்பாட்டுக்கான ’அன்பு’ என்ற புதிய சேவை தொடங்கப்பட்டது.

இதன் மூலம், பெண்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்கான அன்பு ஹெல்த் கார்டுகளை பெண் ஊழியர்கள், பெண் தூய்மைப் பணியாளர்கள், மாணவிகள் மற்றும் பொது வாழ்வில் உள்ள பெண்களுக்கு சத்யபாமாவின் வேந்தர் டாக்டர் மரியஜீனா ஜான்சன் வழங்கினார்.

நடிகை சமந்தா
நடிகை சமந்தா

இதில் சமந்தா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். இந்த சேவை முயற்சிக்கு வாழ்த்துக்களை தெரிவித்த அவர், "பெண்கள் தங்கள் நலனைப் பற்றி சிந்திப்பது சுயநலம் என்று கருதி முக்கியத்துவம் தருவதில்லை. அது தவறு!

தற்போது பெண்களின் ஆரோக்கியம் பற்றிய புள்ளிவிவரங்கள் மிகவும் கவலைக்குரியதாக உள்ளது. அதனால், ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வு அவசியம் தேவை” என்றார்.

சத்யபாமாவின் அன்பு ஹெல்த் கார்டு முயற்சி நாடு முழுவதும் உள்ள பெண்களின் ஆரோக்கியத்தில் நேர்மறையான தாக்கத்தை நிச்சயம் ஏற்படுத்தும் என்றும் சமந்தா கூறினார்.

இதையும் வாசிக்கலாமே...

பிளஸ் டூ மாணவர்களே... மறுமதிப்பீடு, மறுதேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்!

வாயில் மலத்தை வைத்துக் கொண்டு பேசாதீர்கள்... வைரமுத்துவுக்கு கண்ணதாசன் மகன் எச்சரிக்கை!

குமரியில் பெரும் சோகம்... கடலில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் 4 பேர் பலி!

வெட்டிப்போட்ட சாதி; கைதூக்கி விட்ட கல்வி... சாதித்துக் காட்டிய நாங்குநேரி மாணவர் சின்னதுரை!

பகீர்... முதலைகள் உள்ள கால்வாயில் 6 வயது மகனை வீசிய பெற்றோர்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in