சிம்பு படத்தில் தான் அறிமுகமானேன்...மனம் திறக்கும் நடிகை ரூபஸ்ரீ!

நடிகை ரூபஸ்ரீ
நடிகை ரூபஸ்ரீ

தமிழ் சினிமாவிலும் சீரியலிலும் தவிர்க்க முடியாத திறமைசாலி நடிகை ரூபஸ்ரீ. குறிப்பாக தமிழ் சீரியல்களில் முன்பு மருமகளாக கோலோச்சியவர் இப்போது புரோமோஷன் வாங்கி மாமியாராகி விட்டார்.

'பாரதி கண்ணம்மா' செளந்தர்யா கதாபாத்திரத்தில் இவரது மாமியார் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற தற்போது, கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'ரஞ்சிதமே' சீரியலில் வேதவள்ளியாக நடித்து வருகிறார். பிஸி ஷெட்யூலில் இருந்தவரிடம் பேசினோம்.

சீரியல்களில் மாமியார்களின் ஸ்டீரியோடைப்பை உடைத்து பலருக்கு பிடித்த மாமியார் ஆகிவிட்டீர்களே?

நடிகை ரூபஸ்ரீ
நடிகை ரூபஸ்ரீ

ஆமாம்! நிறைய சின்னத்திரை ரசிகர்கள் என்னிடம் வந்து குறிப்பாக கல்லூரி பெண்கள் கூட என்னிடம் வந்து உங்களைப் போல தான் மாமியார் வேண்டும் என எதிர்பார்க்கிறேன் எனச் சொல்வார்கள். இது கேட்கும் போது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும். இத்தனைக்கும் காரணம் 'பாரதி கண்ணம்மா' சீரியல் தான்.

முதலில் அந்த சீரியலில் நெகடிவ் ஷேட் இருப்பது போல தான் என் கதாபாத்திரத்தை காட்டினார்கள். அதுவும் கண்ணம்மாவுக்கு மட்டும்தான் நான் அப்படி! மற்றபடி குடும்பத்தில் கணவன், குழந்தைகளுக்கு நல்ல அம்மா என்ற ரீதியில் தான் இருந்தது. அதன் பிறகு தான் என் கதாபாத்திரத்தின் டிராக் மாறியது. நான் பாசிட்டிவாக மாறும்போது பாரதி கதாபாத்திரம் நெகட்டிவாக மாறும்.

இந்த சீரியலில் குழந்தைகள் தற்கொலை செய்து கொள்வேன் என்பது போல பேசிய வசனங்கள் சர்ச்சையானதே...கவனித்தீர்களா?

நடிகை ரூபஸ்ரீ...
நடிகை ரூபஸ்ரீ...

ஆமாம்! அது தவறாக வழிநடத்தும் என்பது போன்ற சில கமெண்ட்களையும் பார்த்தேன். அது அந்த கதையின் சூழ்நிலைக்குத் தேவைப்பட்டதால் அப்படி அமைந்தது. அதற்காக நான் அதை நியாயப்படுத்தவில்லை. இப்போதுள்ள குழந்தைகள் மீது படிப்பு, எக்ஸ்ட்ரா கரிக்குலர் ஆக்டிவிட்டிஸ் என நிறைய அழுத்தங்கள் இருக்கிறது.

வேலைக்குப் போனால் செட்டில் என நினைக்கிறோம். ஆனால், அதற்குப்பிறகு தான் நிறைய அழுத்தங்களைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. அதனால், முடிந்தளவு எந்த அழுத்தத்தையும் அதிகம் எடுத்துக் கொள்ளாமல் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.

'பாரதி கண்ணம்மா1' அளவுக்கு அதன் அடுத்த சீசன் வரவேற்புப் பெறாததற்கு என்ன காரணம் என நினைக்கிறீர்கள்?

நடிகை ரூபஸ்ரீ
நடிகை ரூபஸ்ரீ

இந்த சீரியல் மட்டுமல்ல, எந்தவொரு சீரியலும் வரவேற்புப் பெறாமல் போவதற்கு பல காரணங்கள் இருக்கிறது. ரசிகர்களின் ரசனை, ஆர்ட்டிஸ்ட் ஒத்துழைப்பு, தயாரிப்புத் தரப்பின் சிக்கல் என இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். உங்களைப் போலவே 'பாரதி கண்ணம்மா2' சீக்கிரம் முடிந்ததில் எனக்கும் வருத்தம்தான். அந்த சீரியல் ஆர்ட்டிஸ்ட் எல்லாம் மீண்டும் ஒரு புதிய சீரியலுக்கு ஒன்று சேர்ந்தால் நன்றாக இருக்கும்.

சீரியல்களில் நீங்கள் அதிக நடித்த அளவுக்கு சினிமாவில் கவனம் செலுத்தவில்லையா அல்லது சீரியலே போதும் என முடிவு செய்து விட்டீர்களா?

'எங்க வீட்டு வேலன்' என்ற படத்தில் தான் முதலில் அறிமுகமானேன். அப்போது எனக்கு 13 வயதோ 14 வயதோதான் . தமிழில் அதற்கு முன்பே வேறு ஒரு படம் கமிட் ஆகி இருந்தாலும் டி.ஆர். சார்தான் முதலில் தமிழில் என்னை அறிமுகப்படுத்தினார். அப்போது சிம்புவும் அந்தப் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.

டி.ஆர். சார் பற்றி சொல்லவே தேவையில்லை. அத்தனை நட்சத்திரங்கள் இருந்தாலும் மிகவும் திறமையாக படப்பிடிப்பு தளத்தில் கையாண்டு பொறுமையாக படப்பிடிப்புத் தளத்தைக் கொண்டு செல்வார். நான் எந்தப் படத்தில் நடிக்க நடிக்க வேண்டும் என்னுடைய டேட் என்ன என்பதை பற்றி எல்லாம் என்னுடைய அப்பா தான் அப்போது மேனேஜ் செய்வார். அதனால், அவர் முடிவெடுத்த படங்களில் தான் நான் என்னுடைய ஆரம்ப காலத்தில் நடித்தேன்.

இப்போது வரை கூட பட வாய்ப்புகள் வந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் எனக்கு சினிமாவை விட சீரியல் என்பது மேனேஜ் செய்வதற்கு வசதியாக இருக்கிறது. சினிமா என்றால் அவுட்டோர் போக வேண்டும். நமக்கும் சில காட்சிகள் தான் இருக்கும். அதனால் அதைவிட இது வசதியாக இருப்பதால் இதுவே போதும் என்று நினைத்திருக்கிறேன்.

உங்க மருமகள் இப்போ பிக் பாஸ் யோயிருக்காங்க...பாத்துட்டு இருக்கீங்களா?

வினிஷாவுடன் ரூபஸ்ரீ
வினிஷாவுடன் ரூபஸ்ரீ

வினுஷா ரொம்பவே லவ்விங்கான கேரக்டர். ரொம்ப கஷ்டப்பட்டு இந்த இடத்துக்கு வந்ததால எல்லார்கிட்டயும் ரொம்பவே பொறுமையா அனுசரிச்சு போவா. பிக் பாஸ் ஆரம்பிச்சு முதல் வாரத்திலேயே ஜெயிலுக்குப் போயிட்டா பிக் பாஸ் ஆரம்பிச்சு இப்போதான இரண்டு வாரம் ஆகுது. போகப்போக கேம் கண்டிப்பா டஃப் ஆகும்.

வினுஷாவும் கண்டிப்பா டஃப்பான பிளேயராதான் இருப்பா. அவளுக்கு இந்த பிளாட்ஃபார்ம் நிச்சயம் அடுத்த உயரத்துக்கு எடுத்துட்டுப் போகும்னு நம்பறேன். எனக்கு இந்த சீசன்ல புடிச்ச பிளேயர்ஸ்ன்னா வினுஷா, நிக்சன், பிரதீப் சொல்லுவேன்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in