அந்த நடிகருக்கு அக்காவாக நடிக்க வேண்டும்... ஆசையை வெளிப்படுத்திய ரோஜா!

அமைச்சர் ரோஜா
அமைச்சர் ரோஜா

பிரபல முன்னணி நடிகருக்கு அக்காவாக நடிக்க வேண்டும் என்று ஆசையை நடிகை ரோஜா வெளிப்படுத்தி உள்ளார்.

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்த ரோஜா, தற்போது ஆந்திர சுற்றுலாத்துறை அமைச்சராக இருக்கிறார். இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனக்கு இப்போதும் சினிமா மீது ஆர்வம் உள்ளது என்பதை வெளிப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து ரோஜா கூறும்போது, "சினிமாவில் தமிழிலும் சரி, தெலுங்கிலும் சரி இப்போதைய இளம் கதாநாயகர்கள் அனைவரும் மிகவும் திறமையான நடிகர்களாக இருக்கிறார்கள். இந்த தலைமுறை ஹீரோக்களில் யாரும் செய்யாத சாதனையை 'பாகுபலி' படம் மூலம் பிரபாஸ் செய்துள்ளார். 'ஆதி புருஷ்' படத்தில் ராமபிரானாக நடித்துள்ளார்.

ரோஜா- மகேஷ்பாபு
ரோஜா- மகேஷ்பாபு

பல சமூக கதைகள், சரித்திர கதைகள் இப்படி வித்தியாசமான கதைகளில் அவர் நடித்துள்ளார். ஒரு நடிகையாக இதை பார்க்கும்போது பெருமைப்படுகிறேன்.

மீண்டும் நடிக்க விருப்பம் உள்ளது. குறிப்பாக மகேஷ்பாபுவுடன் நடிக்க ஆசை உள்ளது. ஆனால் நிச்சயம் அம்மாவாக நடிக்க மாட்டேன். அக்கா, அண்ணி போன்ற வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் நடிப்பேன்'' என்று கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in