இணையத்தில் வைரலான நடிகை ரோஜா மகளின் ஆபாச மார்பிங் புகைப்படம்

நடிகை ரோஜா.
நடிகை ரோஜா.

எனது மகளின் புகைப்படத்தை மார்பிங் செய்து இணையத்தில் தவறாகப் பதிவிட்டனர் என்று நடிகையும், அமைச்சருமான ரோஜா புகார் கூறியுள்ளார்.

ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் நடிகை ரோஜா. 'செம்பருத்தி' திரைப்படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகமானார். இதனைத் தொடர்ந்து 'சூரியன்', 'உழைப்பாளி', 'அதிரடி படை',' வீரா', 'அசுரன்', ' மக்கள் ஆட்சி', 'அடிமைச் சங்கிலி', 'என் ஆசை ராசாவே',' ஊட்டி' உள்பட பல படங்களில் நடித்துள்ளார். கடந்த 2002-ம் ஆண்டு இயக்குநர் செல்வமணியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதன் பின் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் மட்டும் கலந்துகொண்டு வந்தார்.

இதன் பின் சில ஆண்டுகளாக அரசியலில் அதிக ஈடுபாடு செலுத்தி வந்தார். ஆந்திராவில் உள்ள நகரி சட்டப்பேரவை உறுப்பினரான ரோஜா, சுற்றுலாத்துறை அமைச்சரானார். இந்த நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், `நான் சினிமா வந்த காலம் முதல் தற்போது பணியாற்றி வருவது வரை எனக்கு வித விதமான பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கிறது. ஆனால், சமீப காலங்களில் என்னைப் பற்றியும், என்னுடைய குடும்பத்தைப் பற்றியும் தேவையில்லாத அவதூறுகளை சமூக வலைதளங்களில் சிலர் பரப்பி வருகின்றனர். உதாரணமாக பிறந்தநாளின் போது என்னுடைய சகோதரர் முத்தமிட்ட போது கூட என்னை அவதூறாக சித்தரித்துள்ளனர்.

இந்த நிலையில் என்னையும், என்னுடைய மகளுடைய புகைப்படங்களையும் ஆபாசமாக மார்பிங் செய்து வெளியிட்டு வருகின்றனர். இதனைப் பார்த்த என்னுடைய மகள் மிகவும் வருத்தப்பட்டாள். அவளுக்கு நான் என்ன பதில் சொல்வேன் என்று தெரியவில்லை. பிரபலங்களின் வாழ்க்கையில் இவையெல்லாம் சாதாரணமானது. இதை நினைத்து நாம் கவலைபட்டால் நம்மால் முன்னேற முடியாது" என்று கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in