ஆண் பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுங்க... நடிகை ரித்திகா சிங் ஆவேசம்!

ரித்திகா சிங்
ரித்திகா சிங்BG

``பெண்கள், சிறுமிகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுகிறார்கள் என்ற செய்தியைக் கேள்விப்படும்போது என் ரத்தம் கொதிக்கிறது'' என ரித்திகா சிங் தெரிவித்துள்ளார்.

மத்தியபிரதேச மாநிலம் உஜ்ஜைனி மாவட்டத்தில் தண்டி அஷ்ரம் பகுதியில் நேற்று முன்தினம் 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமியை குற்றவாளி ஆள்நடமாட்டமற்ற பகுதியில் விட்டுச் சென்றுள்ளான்.

நடிகை ரித்திகா சிங்
நடிகை ரித்திகா சிங்

இந்தச் சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆட்டோ டிரைவர் ஒருவர் உள்ளிட்ட நால்வர் இந்த வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து கருத்துத் தெரிவித்துள்ள நடிகை ரித்திகா சிங், “ஆண்களுக்கு பெண்கள் காட்சிப் பொருள் கிடையாது. அவர்களையும் சமமாக மதிக்க வேண்டும் என ஆண் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுத்து வளருங்கள். பெண்கள் மற்றும் குழந்தைகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப் படுகிறார்கள், கொடுமைப்படுத்தப்படுகிறார்கள் என்ற செய்தியைக் கேள்விப்படும்போது என் ரத்தம் கோபத்தால் கொதிக்கிறது” என வேதனை தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in