காதலை வெளிப்படுத்திய நடிகை... தனுஷ் கொடுத்த ரியாக்‌ஷன் என்ன?

நடிகர் தனுஷ்
நடிகர் தனுஷ்

தனுஷிடம் சர்ச்சை நடிகை ரேகா நாயர் தன் காதலை வெளிப்படுத்தியுள்ளார்.

சின்னத்திரை மற்றும் தமிழ் சினிமாவில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் நடிகை ரேகா நாயர். சமீபத்தில் பார்த்திபன் இயக்கத்தில் வெளியான 'இரவின் நிழல்' படத்தில் இவர் மேலாடை இல்லாமல் நடித்த காட்சிகளும் பரபரப்பாகப் பேசப்பட்டது. இந்தக் காட்சியை மோசமாக விமர்சித்த நடிகர் பயில்வான் ரங்கநாதனுடன் ரேகா நாயர் நடுரோட்டில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சிகளும் அப்போது வைரலானது. இப்படிப் பல சர்ச்சைகளுக்குப் பஞ்சமில்லாத ரேகா நாயர் தற்போது தனுஷ் மீதான தன் காதலை வெளிப்படுத்தியுள்ளார்.

நடிகை ரேகா நாயர்
நடிகை ரேகா நாயர்

அந்த வகையில் தனது சமீபத்திய பேட்டி ஒன்றில், "தமிழ் சினிமாவில் எனக்கு மிகவும் பிடித்த நடிகர் தனுஷ். அவர் மட்டும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்திருந்தால், அவரைத் திருமணம் செய்திருப்பேன்.

சமீபத்தில் கூட தனுஷை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவரிடம் நான் எனக்கு உங்களை மிகவும் பிடிக்கும் என சொன்னேன். இதை அவரிடம் பலர் சொல்லியிருப்பதால் அவர் அதை சாதாரணமாக எடுத்து கொண்டார்" எனக் கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in