நடிகை ராஷ்மிகாவின் டீப்ஃபேக் வீடியோ: மனம் திறந்த சாரா படேல்!

ராஷ்மிகாவின் டீப்பேக் வீடியோ
ராஷ்மிகாவின் டீப்பேக் வீடியோ

நடிகை ராஷ்மிகாவின் டீப்ஃபேக் வீடியோவில் இருந்த சாரா படேல் இதுதொடர்பாக முதல் முறையாக மனம் திறந்து பேசியுள்ளார்.

நடிகை ராஷ்மிகாவின் முகத்தை வேறொரு பெண்ணின் வீடியோவில் டீப் ஃபேக் டெக்னாலஜி மூலம் மாற்றம் செய்து நேற்று முன்தினம் மர்மநபர்கள் வெளியிட்டனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாக நடிகர்கள் அமிதாப் பச்சன், மிருணாள் தாக்கூர் உள்ளிட்டப் பலரும் இந்த வீடியோவிற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

நடிகை ராஷ்மிகாவும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி தனக்கு ஆதரவு தெரிவித்தவர்களுக்கு நன்றியும் கூறினார்.

சாரா படேல்
சாரா படேல்

இது மட்டுமல்லாது நடிகை கத்ரீனாவும் இது போன்ற மார்ஃபிங் புகைப்பட சர்ச்சையில் சிக்கினார். இதுபோன்ற மார்ஃபிங் புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டால் 3 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது.

இந்த நிலையில், ராஷ்மிகாவின் வீடியோவில் இருந்த இந்தியன் - பிரிட்டிஷ் இன்ஃபுளூயன்சரும், இன்ஜினியருமான சாரா படேல் இதற்கு விளக்கம் கொடுத்துள்ளார்.

விளக்கம் கொடுத்த சாரா படேல்.
விளக்கம் கொடுத்த சாரா படேல்.

இதுகுறித்து அவர் கொடுத்துள்ள விளக்கத்தில், " யாரோ ஒரு நபர் எனது உடலையும், பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனாவின் முகத்தையும் பயன்படுத்தி டீப் ஃபேக் வீடியோவை உருவாக்கியது என் கவனத்துக்கு வந்திருக்கிறது.

இதற்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இந்த விஷயத்தால் நான் மனஉளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறேன். இப்படி வீடியோ வெளியானதை பார்த்து வருத்தமும் கொள்கிறேன். இந்த சம்பவத்தால் சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிடவே பயமாக இருக்கிறது.

இணையத்தில் பகிரப்படுபவை அனைத்துமே உண்மையானவை இல்லை. எனவே நீங்கள் பார்க்கும் ஒவ்வொரு வீடியோ மற்றும் புகைப்படங்கள் உண்மையானதா, இல்லையா என்பதை தயவு செய்து பல முறை சரி பார்த்துக்கொள்ள வேண்டும்" எனக் கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in