சல்மான் கானுடன் ஜோடி போடும் ராஷ்மிகா... அடுத்தடுத்த வாய்ப்புகளால் குஷி!

சல்மான் கான் - ராஷ்மிகா
சல்மான் கான் - ராஷ்மிகா

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் சல்மான் கானுடன் ஜோடியாக நடிக்க நடிகை ராஷ்மிகா மந்தனா ஒப்பந்தமாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தென்னிந்திய நடிகைகள் பலரும் தற்போது பாலிவுட் படங்களில் நடிக்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். நயன்தாரா, ஜோதிகா, சாய்பல்லவி, ராஷ்மிகா என இந்தப் பட்டியல் கொஞ்சம் பெருசு. பாலிவுட் மார்கெட், அதிக சம்பளம், அதிக புகழ் வெளிச்சம் என பல காரணங்கள் உண்டு.

ராஷ்மிகா மந்தனா
ராஷ்மிகா மந்தனா

அந்த வகையில், தெலுங்கு- தமிழ் படங்களில் நடித்து வரும் ராஷ்மிகா இப்போது பாலிவுட்டில் அடுத்தடுத்து படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

கடந்த வருடம் ரன்பீர் கபூருடன் ஜோடி போட்ட ‘அனிமல்’ படம் வெளியாகி இருந்தது. ஆணாதிக்கம் நிறைந்திருக்கிறது என இந்தப் படம் கடுமையான பல விமர்சனங்களை சந்தித்தது. ராஷ்மிகாவின் கதாபாத்திரமும் இணையத்தில் கேலிக்குள்ளானது.

இருந்தாலும் இந்த விமர்சனங்களை எல்லாம் தாண்டி ராஷ்மிகாவுக்கு அடுத்தடுத்து பாலிவுட்டில் வாய்ப்புகள் குவிந்து வரும் நிலையில், தற்போது சல்மான் கானுடன் ஜோடி சேர்ந்திருக்கும் விஷயத்தை அறிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் ராஷ்மிகா. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிக்கும் ’சிக்கந்தர்’ படத்தில் ஜோடியாகிறார்.

ராஷ்மிகா பதிவு
ராஷ்மிகா பதிவு

'என்னுடைய அடுத்தப் படம் குறித்து அப்டேட் கேட்டவர்களுக்காக இதை நான் சொல்கிறேன். ஏ.ஆர். முருகதாஸ்- சல்மான் கானின் ‘சிக்கந்தர்’ படத்தில் நடிக்க இருக்கிறேன். இந்தப் படத்தில் நடிக்க இருப்பது மகிழ்ச்சி’ என்று கூறியிருக்கிறார். பெரிதும் எதிர்பார்க்கப்படும் ‘புஷ்பா2’ மற்றும் தனுஷின் ‘குபேரா’ ஆகிய படங்களில் ராஷ்மிகா நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

அதிர போகுது மதுரை... அரசியல் மாநாட்டிற்கு தேதி குறித்த விஜய்!

கோடை விடுமுறையில் சோகம்... ஏரியில் குளிக்கச் சென்ற 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி!

ஹஜ் பயணிகளின் புனித பயணம் தொடங்கியது... டெல்லியில் இருந்து முதல் விமானம் புறப்பட்டது!

எஸ்எஸ்எல்சி மாணவர்களுக்கு குட்நியூஸ்ட்... பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு!

ரூ.90 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்... விமான நிலையத்தில் பரபரப்பு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in