இப்போது எனக்கு நல்ல நேரம் நடக்கிறது... உற்சாகத்தில் துள்ளிக் குதிக்கும் ராஷ்மிகா!

ராஷ்மிகா மந்தனா
ராஷ்மிகா மந்தனா

எனக்கு இப்போது நல்ல நேரம் நடக்கிறது என நடிகை ராஷ்மிகா மந்தனா உற்சாகமாகக் கூறியுள்ளார்.

அல்லு அர்ஜூனுடன் ‘புஷ்பா2’ திரைப்படம், ரன்பீருடன் பாலிவுட்டில் ‘அனிமல்’, ஹீரோயின் சென்ட்ரிக் படமான ‘ரெயின்போ’ என ’இன்னும் இரண்டு வருடங்களுக்கு என்கிட்ட கால்ஷீட் கேட்காதீங்கப்பா’ என பயங்கர பிஸியாக நடித்து வருகிறார் ராஷ்மிகா.

இந்த நிலையில், சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் ‘நாம் சாப்பிடும் ஒவ்வொரு அரிசியிலும் நமது பெயர் எழுதியிருக்கும் என்று சொல்லுவார்கள்.என்னைக் கேட்டால் நடிகர், நடிகைகள் நடிக்கும் கதாபாத்திரம் கூட அவர்களின் பெயர் எழுதியிருந்தால் தான் அந்த கதாபாத்திரம் கிடைக்கும் என்று நம்புகிறேன். 

ராஷ்மிகா மந்தனா
ராஷ்மிகா மந்தனா

ஒவ்வொருவருக்கும் ஒரு நல்ல நேரம் இருக்கும். இப்போது எனக்கு நல்ல நேரம் நடக்கிறது. இத்தனை படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன் என்ற ஆனந்தத்தை விட நல்ல நல்ல கதைகளில் நடிக்கிறேன் என்பது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது” என உற்சாகமாக பேசியுள்ளார். ‘நேஷனல் கிரஷ்’ஷின் இந்தப் பேச்சுக்கு ரசிகர்களும் மகிழ்ச்சியைப் பகிர்ந்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in