நவராத்திரியில் ஆரம்பிச்சு நியூ இயர் வரைக்கும் திருவிழா தான்! - ராஷி கண்ணா கொண்டாட்டம்!

ராஷி கண்ணா
ராஷி கண்ணா

படபடக்கும் கண்கள், பந்தா பேச்சு, பளீர் சிரிப்பு என சினிமாவுக்கான எந்தவிதமான எக்ஸ்ட்ரா ஒப்பனைகளும் இல்லாமல் படுபாந்தமாக பக்கத்துவீட்டு பெண்ணைப் போல வந்தமர்கிறார் நடிகை ராஷி கண்ணா.

‘இமைக்கா நொடிகள்’ மூலம் தமிழுக்கு அறிமுகமான ராஷி கண்ணா, அதற்கு முன்பாகவே இந்தியில் ‘மெட்ராஸ் கபே’ மூலம் தடம் பதித்தவர். அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு, இது வரை 33 படங்களில் நடித்து முடித்திருக்கிறார். சித்தார்த் மல்ஹோத்ராவுடன் ‘ஹோதா’, ‘அரண்மனை 4’, சர்வானந்த் ஜோடியாக பெயரிடப்படாத தெலுங்குப் படம், இந்தியில் வெப் தொடர்கள் என கண்ணாவின் லிஸ்ட் இன்னும் நீள்கிறது.

இது நவராத்திரி காலம் என்பதால் நவராத்திரி கொண்டாட்டங்களில் இருந்தே ராஷி கண்ணாவிடம் பேச்சைத் தொடங்கினோம்.

“அதெப்படி நவராத்திரி கொண்டாட்டங்கள்ன்னு ஒரே வரியில முடிச்சுட முடியும். இங்கே மும்பையில் துர்கா பூஜை. எல்லோருக்கும் 9 நாள் திருவிழா என்றால், எனக்கு நவராத்திரி பூஜை துவங்கி புதுவருஷம் வரைக்கும் கொண்டாட்டம் தான். நவராத்திரி முடிஞ்சா தீபாவளி ஃபெஸ்ட்டிவெல் மூட் வந்துடும்.

நவம்பர் 30 என்னோட பிறந்தநாள் செலிபிரேஷன் ப்ளான் பண்ண ஆரம்பிச்சுடுவேன். அப்புறமா கிறிஸ்துமஸ், நியூ இயர்ன்னு வருஷத்தின் கடைசி மூன்று மாதங்கள் எப்பவுமே எனக்குக் கொண்டாட்டம் தான்.

நவராத்திரியில் ஒன்பது நாளும் விசேஷம்னு சொல்வாங்க. நவராத்திரி நாட்களில் தினமும் அம்மனுக்கு அலங்காரம் செய்து பூஜை செய்வேன். நவராத்திரியின் ஒன்பது நாளுக்கும் எனக்கும் புதுசா வெரைட்டியான ட்ரெஸ். அப்புறமா போட்டோஷூட், இன்ஸ்டாவுல போஸ்ட்னு கொண்டாட்டம் முடிஞ்சுடும்.

படிக்கிற காலத்துல நான் ஃபர்ஸ்ட் ரேங்க் பொண்ணு. அதனால அப்பெல்லாம் புது ட்ரெஸ், ஸ்வீட்ஸ், பட்டாசு தான் பெரிய கொண்டாட்டமா இருக்கும். டெல்லியில் பிறந்து வளர்ந்த பொண்ணு. அதனால எங்களுக்குப் பெரிய பண்டிகைன்னா தீபாவளிதான். ஐ.ஏ.எஸ். ஆக வேண்டும் என்பது தான் எனக்கு கனவாக இருந்தது. சினிமா ஆசை கொஞ்சம்கூட கிடையாது. சினிமா வாய்ப்புக் கிடைச்சதால, ஒரு அழகான ஐ.ஏ.எஸ். அதிகாரியை மிஸ் பண்ணிட்டீங்க” என்று கண் சிமிட்டுகிற ராஷி கண்ணாவுக்கு அனுஷ்கா மாதிரி இளவரசி வேடங்களில் நடிக்க விருப்பமாம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in