புது காதலில் நடிகை ரம்யா? வைரலாகும் புகைப்படம்

கரண் ஜோஷியுடன்  ரம்யா
கரண் ஜோஷியுடன் ரம்யா

நடிகை ரம்யா, இளைஞர் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

தமிழில், குத்து, கிரி, பொல்லாதவன், வாரணம் ஆயிரம், சிங்கம்புலி உட்பட சில படங்களில் நடித்தவர் கன்னட நடிகை ரம்யா என்ற திவ்யா ஸ்பந்தனா. இவர், சினிமாவை விட்டுவிட்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். மாண்டியா தொகுதியில் போட்டியிட்டு எம்.பி ஆனார். இப்போது அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கும் ரம்யா, மீண்டும் சினிமாவில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக திரைப்பட விழாக்களில் அவர் கலந்துகொண்டார்.

இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இளைஞர் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை நடிகை ரம்யா பதிவிட்டுள்ளார். அதைக் கண்ட ரசிகர்கள் அவர் யார் என்பதைத் தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டினர்.

அவர், கரண் ஜோஷி என்றும் ரம்யாவின் நெருங்கிய நண்பர் என்றும் கூறப்படுகிறது. இருவரும் காதலித்து வருவதாக கன்னட சினிமாவில் கூறப்படுகிறது. ஆனால், இதுபற்றி ரம்யா ஏதும் தெரிவிக்கவில்லை.

நடிகை ரம்யா, ஏற்கனவே போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த தொழிலதிபர் ரபேல் என்பவரை காதலித்து வந்தார். கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in