விபத்திற்குப் பிறகு சந்தோஷ மனநிலைக்கு மாறிய நடிகை ரம்பா: போட்டோ, வீடியோவை வெளியிட்டார்

விபத்திற்குப் பிறகு சந்தோஷ மனநிலைக்கு மாறிய நடிகை ரம்பா: போட்டோ, வீடியோவை வெளியிட்டார்

கனடாவில் ஏற்பட்ட கார் விபத்திற்குப் பிறகு தனது குழந்தைகளுடன் வார விடுமுறையைக் கழிக்கும் புகைப்படங்கள், வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை ரம்பா பகிர்ந்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை ரம்பா. `உள்ளத்தை அள்ளித்தா', 'அருணாசலம்', 'காதலா காதலா', 'நினைத்தேன் வந்தாய்' உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். 2019-ம் ஆண்டு தொழிலதிபர் ஒருவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். கனடாவில் வசித்து வரும் அவருக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.

இந்நிலையில் பள்ளியில் படிக்கும் தனது குழந்தைகளை ரம்பா காரில் அழைத்து வந்துள்ளார். அப்போது எதிரே வந்த காரின் மீது ரம்பாவின் கார் எதிர்பாராத விதமாக மோதியது. இதில் அவரும் மூத்த மகளும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இளைய மகள் சாஷா காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து ரம்பா தனது ட்விட்டர் பக்கத்தில், ‘பள்ளியிலிருந்து குழந்தைகளை அழைத்து வரும்போது நடந்த கார் விபத்தில் குழந்தைகளுடன் நான் உயிர் தப்பினேன்.நாங்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறோம். நானும் என் மூத்த மகளும் சிறு காயங்களுடன் சிகிச்சை பெற்று மீண்டு வந்துள்ளோம். இளைய மகள் சாஷா இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்’’ எனத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், விபத்தில் இருந்து குழந்தை மீண்ட நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாரவிடுமுறையைக் கொண்டாடும் புகைப்படங்களை நடிகை ரம்பா இன்று வெளியிட்டுள்ளார். இப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் தொடர்பான வீடியோவையும் ரம்பா பகிர்ந்துள்ளார்.

அதில் ரம்பாவின் மகன், நடிகர் விஜய்யின் அரபிக்குத்து பாடலுக்கு துள்ளி துள்ளி டான்ஸ் ஆடுகிறான். இது தொடர்பான வீடியோவில், “ஹபீபி… என் வீட்டில் தொடங்கியது. இந்த வார இறுதியில் குழந்தைகள் மீண்டும் ஃபார்முக்கு வந்தார்கள். அவர்களை இயல்பு நிலைக்கு கொண்டு வர என்னால் முடிந்தவரை முயற்சி செய்கிறேன்" என்று ரம்பா குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in