'இந்தியன் 2' படத்தில் கமலின் மேக்கப்: அப்டேட் கொடுத்த நடிகை ரகுல்ப்ரீத் சிங்

இந்தியன் 2
இந்தியன் 2

‘இந்தியன்2’ படத்தில் நடிகர் கமல்ஹாசனின் அர்ப்பணிப்பு குறித்து நடிகை ரகுல்ப்ரீத் சிங் வியந்து கூறியுள்ளார்.

ஷங்கர் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன், காஜல் அகர்வால், ரகுல்ப்ரீத் சிங், ப்ரியா பவானி ஷங்கர் உள்ளிட்டப் பலரும் நடித்து வரக்கூடியத் திரைப்படம் ‘இந்தியன்2’. படத்திற்குக் அனிருத் இசையமைக்க, லைகா தயாரிக்கிறது. கரோனா மற்றும் சிலப் பிரச்சினைகளுக்குப் பிறகு இதன் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி இருக்கிறது. இந்தப் படத்திற்காக நடிகை காஜல் அகர்வால் சிறப்புக் குதிரையேற்றம் மற்றும் களரி பயிற்சிகளைப் பெற்று வரக்கூடிய வீடியோக்களை தனது சமூகவலைதளத்தில் பதிவேற்றினார்.

நடிகை ரகுல் பிரீத் சிங்
நடிகை ரகுல் பிரீத் சிங்

இந்த நிலையில், நடிகை ரகுல் ப்ரீத் சிங், படப்பிடிப்புத் தளத்தில் நடிகர் கமல்ஹாசனின் அர்ப்பணிப்பு குறித்து பகிர்ந்துள்ளார். "உங்கள் அனைவருக்கும் ஒரு விஷயம் சொல்ல நினைக்கிறேன். ‘இந்தியன்2’ படத்தில் புரொஸ்தஸ்டிக் மேக்கப்பும் உள்ளது. 90 வயதான நபராக கமல் சார் இதில் நடிக்கிறார். இந்த மேக்கப்பிற்காக கிட்டத்தட்ட நான்கில் இருந்து ஐந்து மணி நேரம் ஆகும். கமல்சார் காலை 5 மணிக்கே வந்து மேக்கப் போட ஆரம்பித்து பத்து மணிக்கு படப்பிடிப்புத் தளத்திற்கு வந்து விடுவார்.

அதேபோல, இந்த மேக்கப்பைக் கலைக்கவும் இரண்டு மணி நேரங்களுக்கு மேல் ஆகிவிடும். அதுவும் இந்த சென்னை காலநிலைக்கு அது கூடுதல் வெப்பமாக இருக்கும். இந்த நூறு வருட சினிமாவில் அவர் கிட்டத்தட்ட அறுபது வருடங்களாக இருக்கிறார். அவர் வாழ்நாளில் 75 சதவீதம் சினிமாவிற்காகவே இருக்கிறார். அவரை விட சினிமாவை சிறப்பாகத் தெரிந்தவர் யாரும் இல்லை" எனவும் வியந்து பேசியிருக்கிறார் ரகுல்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in