இது எனக்கு முதல் படம்... அட, எதைச் சொல்கிறார் நடிகை ராதிகா!

நடிகை ராதிகா...
நடிகை ராதிகா...

இது எனக்கு முதல் படம் நடிகை ராதிகா நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

'கிழக்கே போகும் ரயில்' படத்தின் மூலமாக தமிழில் இயக்குநர் பாரதிராஜா மூலம் அறிமுகமானவர் நடிகை ராதிகா. அதன் பிறகு எண்பதுகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர், பின்பு சீரியலிலும் தடம் பதித்தார். சீரியலிலும் 'சித்தி', 'வாணி ராணி' உள்ளிட்டப் பல ஹிட் சீரியல்களைக் கொடுத்துள்ளார். நடிப்பு மட்டுமில்லாது தயாரிப்பு, ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் தடம் பதித்த நடிகை ராதிகா தற்போது பிரெஞ்சு படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

முதல் முறையாக பிரெஞ்சு மொழியில் உருவாக உள்ள ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளார் ராதிகா. தற்போது இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகளுக்காக பிரான்ஸ் சென்றுள்ள அவர், சில புகைப்படங்களைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும், இந்தத் திரைப்படத்தில் நடிக்க தன்னை ஊக்குவித்த தனது கணவர் சரத்குமாருக்கும், தனது மகள் மிதுனுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். மேலும் இதுதான் தன்னுடைய முதல் படத்திற்காக செல்வது போல பதற்றமாக உள்ளது எனவும் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் ராதிகா.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in