பரபரப்பு... சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது ராதிகா சரத்குமார் புகார்!

சிவாஜி கிருஷ்ணமூர்த்தி ராதிகா
சிவாஜி கிருஷ்ணமூர்த்தி ராதிகா

திமுக மேடைப் பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது பாஜகவை சேர்ந்த நடிகை ராதிகா புகார் கொடுத்துள்ளார். இந்த விஷயம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

திமுகவின் தலைமைக் கழக பேச்சாளர்களில் ஒருவரான சிவாஜி கிருஷ்ணமூர்த்தி எதிர்கட்சித் தலைவர்களையும், அந்தக் கட்சியை சேர்ந்த பெண் தலைவர்களையும் கடுமையாக தாக்கிப் பேசக்கூடியவர். இதனால், அடிக்கடி சர்ச்சைகளிலும் சிக்குவார் சிவாஜி. இந்த சர்ச்சைகள் காரணமாக கடந்த ஆண்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்டு, பின்பு மன்னிப்பு கோரியதால் மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டார்.

இதுமட்டுமல்லாது ஆளுநர் ரவி, குஷ்பு ஆகியோரைத் தாக்கி பேசியதால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை ஆனார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சரத்குமார், ராதிகா பற்றி அவதூறு பரப்பும் விதமாக சிவாஜி பேசியதற்கு ராதிகா கடுமையாகத் திட்டி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

’ஜெயிலுக்கு போயும் திருந்தலையா நீ? உன் பேச்சுக்கு கடுமையா தண்டிக்கப்படனும்’ என ராதிகா சொல்லி இருந்தார். இதனை அடுத்து, சென்னை கமிஷனர் அலுவலகத்தில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது பரபரப்பு புகார் கொடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிகிறது. தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பாக விருதுநகர் வேட்பாளராக ராதிகா களமிறங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

‘இளையராஜா’ படத்திற்கு இசையமைப்பாளரே கிடையாதா?! ரசிகர்கள் ஷாக்!

ஆன்ட்ராய்டு 15 அப்டேட்... மொபைல் திருடு போனால் உரிமையாளரை எச்சரிக்கும்; முக்கிய தகவல்களையும் பாதுகாக்கும்

கையில் கட்டுடன் கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு புறப்பட்ட ஐஸ்வர்யா ராய்... பதறும் ரசிகர்கள்!

வீடியோ காலில் மனைவியை பயமுறுத்த தூக்குமாட்டிய ஜிம் பயிற்சியாளர்... கயிறு இறுகி உயிரிழந்த பரிதாபம்!

'அவங்களைக் கொலை செய்கிற எண்ணமே இல்லை'... ரீல்ஸ் மோனிகா பரபரப்பு வாக்குமூலம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in