கையில் சிகரெட்... கால்மேல் கால்போட்டு கெத்தாக போஸ்: சர்ச்சையில் சிக்கிய ராதிகாவின் `கொலை' பட போஸ்டர்!

கையில் சிகரெட்... கால்மேல் கால்போட்டு கெத்தாக போஸ்: சர்ச்சையில் சிக்கிய ராதிகாவின் `கொலை' பட போஸ்டர்!

'கொலை’ படத்துக்காக, கையில் சிகரெட் உடன் சோபாவில் கால்மேல் கால்போட்டு கெத்தாக போஸ் கொடுத்தபடி இருக்கும் ராதிகாவின் படம் சர்ச்சையில் சிக்கியுள்ளது.

விஜய் ஆண்டனி நடிக்கும் புதிய படத்தின் பெயர் `கொலை', இதில் ஆண்டனிக்கு ஜோடியாக ரித்திகா சிங் நடித்துள்ளார். இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தின் போஸ்டர்கள் ஒவ்வொன்றாக வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நடிகை ராதிகாவின் கேரக்டர் சம்பந்தப்பட்ட போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இதில், நடிகை ராதிகா, ரேகா என்கிற பாஸ் கேரக்டரில் நடித்துள்ளதாக குறிப்பிட்டுள்ள படக்குழு, அவர் சம்பந்தப்பட்ட போஸ்டரையும் வெளியிட்டுள்ளது. அதில் கையில் சிகரெட் உடன் சோபாவில் கால்மேல் கால்போட்டு கெத்தாக போஸ் கொடுத்தபடி இருக்கிறார் ராதிகா.

இதன்மூலம் அவருக்கு இப்படத்தில் வெயிட்டான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தி இருக்கிறது படக்குழு. இந்த நிலையில் ராதிகாவின் இந்த போஸ்டர் சர்ச்சையிலும் சிக்கி உள்ளது. ராதிகா தனது கையில் சிகரெட் வைத்திருப்பது தான் சர்ச்சைக்கு காரணம். கையில் சிகரெட் வைத்திருந்தால் தான் பாஸ் என்று அர்த்தமாகுமா? என சமூக வலைதளங்களில் சிலர் ராதிகாவுக்கு எதிராக சண்டை மூட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in