
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த ராதா மகள் கார்த்திகாவின் நிச்சயதார்த்தம் கடந்த அக்டோபர் மாதம் மிக எளிமையாக நடந்து முடிந்த நிலையில் தற்போது மாப்பிள்ளையின் புகைப்படத்தை கார்த்திகா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்த நடிகை ராதா, 1980 காலகட்டத்தில் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், மம்முட்டி, மோகன்லால், சிரஞ்சீவி, வெங்கடேஷ் என தென்னிந்தியாவின் முக்கிய நடிகர்களுடன் ஜோடியாக நடித்தவர்.
இவருடைய மூத்த மகள் கார்த்திகா தமிழ் சினிமாவில் ஜீவாவுக்கு ஜோடியாக, ’கோ’ படத்தில் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து ஒரு சில படங்களில் மட்டும் நடித்த கார்த்திகா, அதன் பின்னர் பட வாய்ப்புகள் இல்லாததால் சினிமாவிலிருந்து விலகி, தனது தந்தையின் பிசினஸை கவனித்துக் கொண்டு வருகிறார்.
கடந்த அக்டோபர் மாதம் கார்த்திகாவுக்கு எளிமையான முறையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதனை அதிகாரபூர்வமாக நடிகை கார்த்திகாவே அறிவித்தும் இருந்தார். இதையடுத்து, நாளை (நவம்பர் 16ம் தேதி) திருவனந்தபுரத்தில் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற உள்ளது. திருமண நிச்சயம் ஆனதில் இருந்து மாப்பிள்ளையின் புகைப்படத்தை வெளிப்படுத்தாமல் இருந்த கார்த்திகா தற்போது மாப்பிள்ளை ரோஹித் மேனனுடன் எடுத்தப் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.
அதில், ‘உன்னை சந்தித்தது கனவு போன்று இருக்கிறது. அதன்பிறகு உன்னுடன் நான் காதலில் விழுந்தது மேஜிக் போல நடந்தது. இனிமேல் நாம் இருவரும் எப்போதும் சேர்ந்து வாழ்வதற்கான தொடக்கத்தின் கவுண்டவுன் இப்போதிருந்து தொடங்குகிறது’ எனக் காதலில் உருகியுள்ளார். திரையுலகைச் சேர்ந்தவர்களும் ரசிகர்களும் இந்த காதல் ஜோடிக்குத் தங்களது திருமண வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் வாசிக்கலாமே...
மும்பை காவல் துறைக்கு திடீர் மிரட்டல்: இந்தியா - நியூசிலாந்து போட்டிக்கு பாதுகாப்பு அதிகரிப்பு!
நரி, அமுல் பேபி என தினேஷ்- விஷ்ணு மோதல்:பிக் பாஸ் இல்லத்தில் அதகளம்!
'பிரதமர் மோடிதான் சிறந்த நடிகர்' - நடிகர் பிரகாஷ்ராஜ் காட்டம்!
என்.சங்கரய்யா உடலுக்கு அரசு மரியாதை: தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
ஹிஜாப் அணிந்து தேர்வெழுத தடையா?: உயர் கல்வித்துறை அமைச்சர் விளக்கம்!