பிக் பாஸூக்குள் போன தினேஷ்... ரச்சிதா பகிர்ந்த எமோஷனல் பதிவு!

தினேஷ், ரச்சிதா மகாலட்சுமி
தினேஷ், ரச்சிதா மகாலட்சுமி

பிக் பாஸ் இல்லத்திற்குள் நடிகர் தினேஷ் வைல்ட் கார்டு என்ட்ரியாக உள்ளே நுழைந்திருக்கிறார். இந்த நிலையில், ரச்சிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எமோஷனலான பதிவு ஒன்றைப் பகிர்ந்திருக்கிறார்.

நடிகை ரச்சிதா
நடிகை ரச்சிதா

பிக் பாஸ்7 தமிழில் ஐந்து போட்டியாளர்கள் வைல்ட் கார்டு என்ட்ரியாக உள்ளே நுழைந்துள்ளனர். இதில் ரச்சிதாவின் கணவரும் நடிகருமான தினேஷூம் ஒருவர். பிக் பாஸூக்குள் நுழையும்போது மேடையில் தன் வாழ்வு எதிர்பாராத விதமாக மாறி விட்டதாக கண்கலங்கி பேசினார்.

இவர் ரச்சிதாவுடனான திருமண வாழ்க்கையைத்தான் தினேஷ் அப்படி குறிப்பிடுகிறார் என ரசிகர்கள் தெரிவித்து வந்தனர். மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சியின் டைட்டிலை வெல்ல வேண்டும் என்ற தன் மனைவியின் ஆசையை நிறைவேற்றுவேன் எனவும் முன்பு கூறினார்.

இப்படி இருக்கையில், ரச்சிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எமோஷனலான பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அண்மையில் உயிரிழந்த தனது தந்தையின் போட்டோ முன்பு தனது தாயுடன் கைகோர்த்து நின்றபடி இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, ’உனக்கு நான்... எனக்கு நீ’ என கேப்ஷன் கொடுத்துள்ளார். இந்தப் பதிவிற்குக் கீழ் ரசிகர்கள் ரச்சிதாவுக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in