‘சர்தார்’ படப்பிடிப்பில் இணைந்தார் ராஷி கண்ணா

நடிகை ராஷி கண்ணா
நடிகை ராஷி கண்ணா

நடிகை ராஷி கண்ணா ’சர்தார்’ படப்பிடிப்பில் இணைந்துள்ளார்.

நடிகை ராஷி கண்ணா, அஜய் ஞானமுத்து இயக்கிய ‘இமைக்கா நொடிகள்’ மூலம் தமிழுக்கு வந்தார். அடுத்து ஜெயம் ரவியுடன் ‘அடங்கமறு’, விஷாலுடன் ’அயோக்யா’, விஜய் சேதுபதியுடன் ‘சங்கத்தமிழன்’, சுந்தர்.சியின் ‘அரண்மனை 3’ படங்களில் நடித்தார்.

இப்போது கார்த்தியின் ‘சர்தார்’, தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ உட்பட சில படங்களில் நடித்து வருகிறார்.

இந்தி நடிகர் அஜய் தேவ்கனுடன் அவர் நடிக்கும் ருத்ரா என்ற வெப் சீரிஸின் டிரெய்லர், கடந்த வாரம் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.

இதற்கிடையே, நாக சைதன்யாவுடன் அவர் நடிக்கும் ‘தேங்க் யூ’ என்ற தெலுங்கு படத்தின் ஷூட்டிங் மாஸ்கோவில் நடந்தது. இதற்காக அவர் அங்கு சென்றிருந்தார். அந்தப் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதால், கார்த்தியின் ‘சர்தார்’ படப்பிடிப்பில் கலந்துகொள்ள சென்னை வந்துள்ளார்.

பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி இரட்டை வேடங்களில் நடிக்கும் படம், ‘சர்தார்’. இதில் ராஷி கண்ணாவும் ரஜிஷா விஜயனும் நாயகிகளாக நடிக்கின்றனர். சிம்ரன், இந்தி நடிகர் சங்கி பாண்டே, முரளி சர்மா, இளவரசு உட்பட பலர் நடிக்கின்றனர். பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் இப்போது நடந்து வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in