திருமணமாகி ஒரு வருடம் தான் ஆச்சு... அதற்குள் கணவரைப் பிரிந்தாரா ’ரோஜா’ சீரியல் நடிகை?

பிரியங்கா நல்காரி
பிரியங்கா நல்காரி

ரோஜா சீரியல் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை பிரியங்கா நல்காரி. சீரியலில் நடித்துக் கொண்டிருந்த போதே தொழிலதிபர் ஒருவரை காதலித்துக் கரம்பிடித்தார். இந்தத் திருமணம் நடந்து ஒரு வருடம் தான் ஆகிறது, ‘அதற்குள் கணவரைப் பிரிந்து விட்டாரா பிரியங்கா?’ என ரசிகர்கள் கமென்ட் போடுமளவுக்கு மணவாழ்க்கை கசந்திருக்கிறது பிரியங்காவுக்கு. இந்தக் கேள்விக்கு அவர் அளித்துள்ள பதிலும் ரசிகர்களை இன்னும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

நடிகை பிரியங்கா நல்காரி
நடிகை பிரியங்கா நல்காரி

சன் டிவியில் ஒளிபரப்பான ‘ரோஜா’ சீரியல் மூலம் பிரபலமானவர் பிரியங்கா. அதன் பிறகு, ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பான ‘சீதா ராமன்’ சீரியலில் நடித்தார். இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போதே, மலேசியாவைச் சேர்ந்த தொழிலதிபர் ராகுல் என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார்.

கூட்டம் கூட்டாமல் கோயிலில் வைத்து அவர் இந்தத் திருமணத்தை திடீரென்று செய்து கொண்டார். இதனால், இரு வீட்டாரும் இந்த ஜோடி மீது கோபத்தில் இருந்தனர். பின்னர், பிரியங்கா வீட்டில் சமாதானம் ஆனார்கள். தன் கணவருக்காக சிறிது காலம் நடிப்பதில் இருந்து விலகி இருந்தார் பிரியங்கா. தற்போது மீண்டும் அவர் அதே ஜீ தமிழ் சேனலில் ‘நளதமயந்தி’ சீரியலில் நடித்து வருகிறார்.

கணவருடன் பிரியங்கா
கணவருடன் பிரியங்கா

கணவர் மலேசியாவில் இருக்க சென்னை, ஹைதராபாத், மலேசியா என மாறி மாறி பறந்து வந்த பிரியங்கா, சமீபத்தில் தனது கணவருடன் ரெஸ்டாரன்ட் தொழிலையும் தொடங்கினார். இந்த நிலையில் தான், பிரியங்கா திடீரென்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனது கணவருடன் இருக்கும் புகைப்படங்கள் அனைத்தையும் நீக்கியுள்ளார்.

இது தொடர்பாக ரசிகர் ஒருவர் அவரிடம் ‘நீங்கள் சிங்கிளா?’ எனக் கேட்டதற்கு ‘ஆமாம்’ என்றும் கூறியுள்ளார் பிரியங்கா. கணவரைப் பிரிந்துவிட்டேனா என்பதைத் தெளிவாகக் கூறாமல் பிரியங்கா இவ்வாறு பேசியிருப்பதும், கணவருடனான புகைப்படங்களை நீக்கியிருப்பதும் ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ரசிகர்கள், ‘திருமணம் ஆன ஒரே வருடத்தில் கணவரைப் பிரிந்து விட்டார் பிரியங்கா’ என கமென்ட் செய்து வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

இந்தியன் ரயில்வேயில் 9,000 காலி பணியிடங்கள் அறிவிப்பு!

அதிர்ச்சி... ஒரே விடுதியில் அடுத்தடுத்து மாணவர், மாணவி தூக்கிட்டு தற்கொலை!

நடுரோட்டில் கட்சி மாறிய அதிமுக நிர்வாகி... வேட்டியை அவிழ்த்து சாலையில் வீசியதால் பரபரப்பு!

‘ஐயா மன்னிச்சுடுங்க...’ இயக்குநர் வீட்டு கதவில் தேசிய விருதுகளை தொங்க விட்ட திருடர்கள்!

கல்வி மட்டுமல்ல... 200 மாணவிகளுக்கு வீடும் கட்டித் தந்த ஆசிரியை; குவியும் பாராட்டுகள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in