பிரபல நடிகையை ஏமாற்றிய அட்லி; ’ஜவான்’ல மிஸ்ஸான நடிகர் விஜய்!

’ஜவான்’ ஷாருக்கான் & அட்லி...
’ஜவான்’ ஷாருக்கான் & அட்லி...

இயக்குநர் அட்லி தன்னை ஏமாற்றி விட்டதாக நடிகை பிரியாமணி கூறியுள்ளார்.

அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் சமீபத்தில் ‘ஜவான்’ படம் வெளியானது. இந்தப் படம் உலகம் முழுவதும் சுமார் 600 கோடிக்கும் அதிகமான வசூலை செய்தது. இதில் ஷாருக்கானுடன் நடிகை பிரியாமணியும் இணைந்து நடித்துள்ளார்.

நடிகை பிரியாமணி...
நடிகை பிரியாமணி...

இது குறித்து பிரியாமணி சமீபத்தில் கொடுத்தப் பேட்டியில், ‘முன்பு அட்லி நடிகர் விஜய் கேமியோவில் நடிப்பதாக சொன்னார். அந்த மகிழ்ச்சியான செய்தியைக் கேட்டு அவருடன் எனக்கும் சில காம்பினேஷன் காட்சிகள் வேண்டும் என சொல்லி இருந்தேன். அவரும் அதற்கு சம்மதித்தார். ஆனால், சில காரணங்களால் அது நடக்கவில்லை. இது எனக்கு அதிருப்தி தான். அட்லி என்னை ஏமாற்றி விட்டார்’ என நகைச்சுவையாக அந்தப் பேட்டியில் பகிர்ந்துள்ளார் பிரியாமணி. ’ஜவான்’ திரைப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்ஃபிலிக்ஸூம் சேட்டிலைட் உரிமையை ஜீ தமிழும் வாங்கி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in