காதலருடன் புது வீட்டுக்கு குடிபுகுந்த நடிகை ப்ரியா பவானி சங்கர்

காதலருடன் புது வீட்டுக்கு குடிபுகுந்த நடிகை ப்ரியா பவானி சங்கர்

தன் காதலருடன் ப்ரியா பவானி சங்கர் புது வீட்டுக்கு குடிபுகுந்துள்ளார்.

நடிகை ப்ரியாபவானி சங்கர் தன் காதலர் ராஜூவுடன் புது வீட்டுக்கு குடி புகுந்துள்ளார். இந்தப் புகைப்படங்களைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இந்த செய்தியையும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: கடந்த 18 வருடங்களாக நானும் ராஜ்வேலும் காதலித்து வருகிறோம். எங்களுக்கு கடற்கரை அருகில் அமைந்துள்ள வீடு வாங்க வேண்டும் என்பது ஆசை. நிலவைப் பார்த்தபடி எங்களது மாலைப்பொழுதையும் கடல் அலைகளால் எங்கள் காலையும் இனி இருக்கும். ஆமாம், எங்களது புதிய வீட்டிற்கு நாங்கள் போகிறோம் என மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

இவருக்கு ரசிகர்கள், சினிமாத்துறை நண்பர்கள் எனப் பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். ப்ரியாவும் ராஜ்வேலும் பல வருடங்களாகக் காதலித்து வருகின்றனர். இவர்களுக்கு ஏற்கெனவே திருமணம் நடந்து விட்டது என செய்திகள் வெளியானாலும் அதுகுறித்து ப்ரியா பவானி ஷங்கர் இன்னும் வெளிப்படையாக உறுதி செய்யப்படவில்லை. கடைசியாக அவரது நடிப்பில் ‘திருச்சிற்றம்பலம்’ வெளியானது. அவரது கைவசம் ‘அகிலன்’, ‘இந்தியன்2’ ஆகிய படங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in