கோலகலமாக தொடங்கியது பிரினீதி சோப்ரா திருமண கொண்டாட்டம்... அசத்தல் புகைப்படங்கள்!

கோலகலமாக தொடங்கியது பிரினீதி சோப்ரா திருமண கொண்டாட்டம்... அசத்தல் புகைப்படங்கள்!

பிரபல நடிகை பிரினீதி சோப்ரா- ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சதாவுக்குத் திருமண தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் இவர்களது திருமண கொண்டாட்டம் களை கட்டத் தொடங்கியுள்ளது.

பாலிவுட் நடிகை பிரினீதி சோப்ராவுக்கும், ஆம் ஆத்மி எம்பி ராகவ் சதா இருவரும் தாங்கள் காதலித்து வருவதை அறிவித்த நிலையில் கடந்த மே மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது. இந்நிலையில் பிரினீதி, ராகவ் இருவருக்கும் நாளை மறுநாள் திருமணம் நடைபெற இருக்கிறது.

பெரும்பாலான கொண்டாட்டங்கள் ராஜஸ்தான், உதய்பூரில் உள்ள லீலா பேலஸில் நடைபெறுகிறது. இதற்காக இன்று காலை பிரினீதி- ராகவ் இருவரும் தங்களது குடும்பத்துடன் உதய்பூர் வந்தடைந்தனர். மணமக்களையும் அவர்களது குடும்பத்தினரையும் வரவேற்கும் விதமாக உதய்பூர் ஏர்போர்ட்டின் ஒரு பக்கத்தில் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு நடனக்கலைஞர்களோடு அசத்தல் வரவேற்பு கொடுக்கப்பட்டது.

மணமக்களை வரவேற்ற ஏர்போர்ட்...
மணமக்களை வரவேற்ற ஏர்போர்ட்...

ப்ரீ வெட்டிங் செலிபிரேஷனாக கடந்த சில தினங்களுக்கு முன்பு டெல்லியில் மணமகன் ராகவ் வீட்டில் கொண்டாட்டம் முடிந்த பிறகு இன்று காலை இரு குடும்பத்தாரும் உதய்பூர் வந்தடைந்துள்ளனர். திருமணத்தில் பஞ்சாபி மெனு, உள்ளூர் ராஜஸ்தானி உணவுகளும் பரிமாறப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. திருமணத்தின் போது சங்கீத்தில் பரினீதி மற்றும் ராகவ்விற்கு பிடித்த வகையில் 90களில் வெளியான பாடல்கள் இசைக்கப்பட இருக்கிறது.

இவர்களது திருமணத்திற்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பரினீதி மற்றும் ராகவ் திருமணத்திற்கான கொண்டாட்டங்கள் செப்டம்பர் 23 அன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து மதியம் 12-4 மணிக்கு வரவேற்பு மதிய உணவு. செப்டம்பர் 24 அன்று இவர்களது திருமணம் கோலாகலமாக நடக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in