திருமணம் பற்றிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரபல நடிகை!

திருமணம் பற்றிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரபல நடிகை!

தமிழில், 'முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு', 'கந்தகோட்டை', 'வேலூர் மாவட்டம்', 'வித்தகன்', 'தகராறு', 'விசித்திரன்' உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் பூர்ணா. இப்போது 'பிசாசு 2' படத்தில் நடித்திருக்கிறார். மலையாள நடிகையான இவர், அங்கு ஷாம்னா காசிம் என்ற பெயரில் நடித்துவருகிறார்.

இவர், துபாயைச் சேர்ந்த தொழிலதிபர் சானித் ஆசிப் அலி என்பவரைத் திருமணம் செய்ய இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இவர்களின் நிச்சயதார்த்த புகைப்படங்கள், பூர்ணாவின் சமூக வலைதளத்தில் பதிவு செய்யப்பட்டு வைரலாகின. இருவருக்கும் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். இந்நிலையில், இவர்களது திருமணம் நிறுத்தப்பட்டுவிட்டதாக சமூகவலைதளங்களில் வதந்திகள் பரவின.

இதற்குப் பதிலளிக்கும் விதமாக, தனது வருங்கால கணவருடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் நடிகை பூர்ணா. இவர்களின் திருமணத் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in