ஒருவரின் வளர்ச்சிக்கு ஒருவர் உறுதுணையாக இருப்போம்: திருமணமான நடிகை பூர்ணா நெகிழ்ச்சியான பதிவு

ஒருவரின் வளர்ச்சிக்கு ஒருவர் உறுதுணையாக இருப்போம்:  திருமணமான நடிகை பூர்ணா நெகிழ்ச்சியான பதிவு

நடிகை பூர்ணா தனக்கு திருமணம் நடந்திருக்கும் செய்தியை அவர் பகிர்ந்துள்ளார்.

’முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு’, ‘தகராறு’, ‘லாக்கப்’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை பூர்ணா. இவரது உண்மையான பெயர் ஷாம்னா கசிம். தமிழ் மட்டுமல்லாது, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் நடித்து வந்தார். தற்போது, பூர்ணா தனக்குத் திருமணம் நடந்துள்ள செய்தியை தனது சமூக வலைதளப் பக்கங்களில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

துபாயில் உள்ள தொழிலதிபரான ஷனித் அசீப் அலி என்பவருடன் ஜூன் மாதம் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இந்த நிலையில் தனது இஸ்டாகிராம் பக்கத்தில் தனக்குத் திருமணமான மகிழ்ச்சியான செய்தியை புகைப்படங்களுடன் பூர்ணா பகிர்ந்துள்ளார்.

அந்த பதில், " நான் நிச்சயம் நல்ல பெண்ணாக இல்லாமல் இருக்கலாம் அல்லது மனைவிக்குரிய அத்தனைத் தகுதிகளோடும் இருக்கலாம். நாம் பழகிய காலத்தில் என்னை எந்த விதத்திலும் நீங்கள் மாற்றுவதற்கு முயற்சி செய்யவில்லை. இருவரும் சேர்ந்து புதிய பயணத்தில் இணைந்து பயணிப்போம். அன்பை எப்போதும் குறையாமல் கொடுப்போம். ஒருவரின் வளர்ச்சிக்கு ஒருவர் உறுதுணையாக இருப்போம்" என நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார் பூர்ணா. இந்த மகிழ்ச்சியான செய்திக்கு அவரது ரசிகர்கள், திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் பூர்ணாவிற்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in