
காலில் அடிபட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பகுதியில் நடிகை பூஜா ஹெக்டே இன்று பகிர்ந்துள்ளது அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
நடிகர் ஜீவாவுடன் 'முகமூடி' படத்தின் மூலம் தமிழில் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. நடிகர் விஜய்யுடன் 'பீஸ்ட்' படத்தில் நடித்ததுடன் மூலம் பிரபலமடைந்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் நடித்து வருகிறார். தற்போது ‘கிசி கா பாய் கிசி கி ஜான்’ படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பின் போது, அவர் தவறி கிழே விழுந்துள்ளார் என்று கூறப்படுகிறது. இதனால், அவருடைய இடது காலில் தசைநார் கிழிந்துள்ளது. இதனால் இரண்டு வாரங்கள் ஓய்வெடுக்க மருத்துவர்களின் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பகுதியில் இன்று காலில் அடிபட்ட புகைப்படத்தை பூஜா ஹெக்டே வெளியிட்டுள்ளார். இந்த நிலையிலும் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க மேக்கப் போடும் படத்தையும் அதில் இணைத்துள்ளார். அவரது காலில் அடிபட்ட படங்களைப் பார்த்து அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். விரைவில் அவர் பூரண நலமடைய வேண்டும் என்று வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.