குத்துப் பாடலுக்கு ஆட பூஜா ஹெக்டே கேட்ட சம்பளம் எவ்வளவு தெரியுமா?

குத்துப் பாடலுக்கு ஆட பூஜா ஹெக்டே கேட்ட சம்பளம் எவ்வளவு தெரியுமா?

குத்துப்பாடலுக்கு ஆடுவதற்கு நடிகை பூஜா ஹெக்டே கேட்ட சம்பளம் வெளியாகி இருக்கிறது.

தமிழில் வெளியான ’முகமூடி’ படம் மூலமாக நடிகையாக அறிமுக மானவர் பூஜா ஹெக்டே. இந்தப் படம் 2012-ம் ஆண்டு வெளியானது. பிறகு தெலுங்கு, இந்தி படங்களில் கவனம் செலுத்தத் தொடங்கினார். தெலுங்கில் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்த அவர், தமிழுக்கு இப்போது மீண்டும் வந்துள்ளார். அவர், விஜய் ஜோடியாக ’பீஸ்ட்’ படத்தில் நடித்துள்ளார்.

இந்தப் படத்தின் மூலம் 10 வருடத்துக்குப் பிறகு அவர் தமிழ் சினிமாவுக்கு வந்துள்ளார். பீஸ்ட் படம் வரும் 13-ம் தேதி ரிலீஸ் ஆகிறது.

இதற்கிடையே, ஒரு பாடலுக்கு ஆடுவதிலும் ஆர்வம் காட்டி வருகிறார் பூஜா ஹெக்டே. பெரும்பாலான நாயகிகள் அதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். நடிகை சமந்தா, ’புஷ்பா’ படத்தில் ஆடியிருந்தார். நடிகை பூஜா ஹெக்டே, ஏற்கெனவே ’ரங்கஸ்தலம்’ படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார்.

இந்நிலையில் வெங்கடேஷ் நடிக்கும் ’எஃப் 3’ என்ற தெலுங்கு படத்தில் ஒரு பாடலுக்கு ஆட, பூஜா ஹெக்டேவிடம் பேசியுள்ளனர். அவர் அதற்கு ரூ.1.25 கோடி சம்பளம் கேட்டதாகவும் பிறகு ரூ.1 கோடிக்கு சம்மதித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தப் படத்தில் வெங்கடேஷுடன் வருண் தேஜ், நடிகைகள் தமன்னா, மெஹ்ரீன் ஆகியோர் நடிக்கின்றனர். அனில் ரவிபுடி இயக்கும் இந்தப் படம் மே 27-ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in