'அவர் கணவரோட சண்டைனா அது அவங்க பிரச்சினை’: நடிகரின் 3 வது மனைவியை சாடும் நடிகை

'அவர் கணவரோட சண்டைனா அது அவங்க பிரச்சினை’: நடிகரின் 3 வது மனைவியை சாடும் நடிகை

பிரபல நடிகரின் மூன்றாவது மனைவியை பிரபல நடிகை சாடியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் பவித்ரா லோகேஷ். கன்னடத்தில் 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர், தமிழில் ராதாமோகன் இயக்கிய ’கௌரவம்’, விஷால் நடித்த ’அயோக்யா’, ‘க.பெ.ரணசிங்கம்’, ’வீட்ல விசேஷம்’ உட்பட சில படங்களில் நடித்துள்ளார்.

ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி விவாகரத்து பெற்ற இவர், பிரபல கன்னட நடிகர் லோகேஷின் மகள்.

இவர் பிரபல தெலுங்கு நடிகரும் பழம்பெரும் நடிகை விஜய நிர்மலாவின் மகனுமான நரேஷை மூன்றாவது திருமணம் செய்துகொள்ள இருப்பதாகச் செய்திகள் வெளியாயின. நடிகர் நரேஷ், தமிழில், ‘நெஞ்சத்தை அள்ளித்தா’, ’பொருத்தம்’, ’சண்டமாருதம்’, ’மாலினி 22 பாளையங்கோட்டை’ உட்பட சில படங்களில் நடித்துள்ளார். மூன்று முறை திருமணம் செய்துள்ள இவர், மூன்றாவது மனைவி ரம்யா ரகுபதியிடம் இப்போது விவாகரத்துக் கோரி வழக்குத் தொடர்ந்துள்ளார்.

நரேஷுடன் பவித்ரா லோகேஷ்
நரேஷுடன் பவித்ரா லோகேஷ்

இந்நிலையில், தனக்கும் பவித்ராவுக்கு திருமணம் நடக்க இருப்பதாகப் பரவும் தகவலை நடிகர் நரேஷ் மறுத்துள்ளார். தனது மூன்றாவது மனைவி ரம்யா ரகுபதிதான் இப்படி பொய்யாக வதந்தி பரப்பி வருவதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இதுபற்றி ஏதும் தெரிவிக்காமல் இருந்த நடிகை பவித்ரா இப்போது பதிலளித்துள்ளார்.

அதில், நானும் நடிகர் நரேஷும் நல்ல நண்பர்கள். எங்களுக்குள் வேறு எதுவும் இல்லை. ரம்யாவுக்கு அவர் கணவர் நரேஷுடன் பிரச்னை என்றால் அதற்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்?. அதுபற்றி ஹைதராபாத்தில்தான் அவர் சண்டைப்போட வேண்டும். நான் இருக்கும் பெங்களூருக்கு வந்து என்னையும் நரேஷையும் பற்றி தேவையற்ற சர்ச்சையை உருவாக்கி இருக்கிறார். என்னைப் பொறுத்தவரை நரேஷ் சிறந்த நண்பர். எங்களிடம் மறைப்பதற்கு ஏதுமில்லை’’ என்று நடிகை பவித்ரா லோகேஷ் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in