போலி முகநூல் கணக்குத் தொடங்கி தவறான தகவல்கள் பதிவேற்றுகிறார்கள்: பிரபல நடிகை போலீஸில் புகார்

போலி முகநூல் கணக்குத் தொடங்கி தவறான தகவல்கள் பதிவேற்றுகிறார்கள்: பிரபல நடிகை போலீஸில் புகார்

தன் பெயரில் , போலி முகநுால் கணக்குத் தொடங்கி தவறானத் தகவல்களைப் பரப்பி வருவதாக பிரபல நடிகை போலீஸில் புகார் செய்துள்ளார்.

தமிழில் 'கவுரவம்', 'அயோக்கியா', ' வீட்ல விசேஷம்', 'க.பெ.ரணசிங்கம்' உட்பட சில படங்களில் நடித்திருப்பவர் கன்னட நடிகை பவித்ரா லோகேஷ். கன்னட நடிகர் மைசூர் லோகேஷின் மகளான இவர், கன்னடத்தில் சுமார் 150-க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். தெலுங்கிலும் நடித்து வருகிறார்.

இவர், பிரபல தெலுங்கு ஹீரோ மகேஷ் பாபுவின் அண்ணன் நரேஷுக்கு நான்காவது மனைவியானதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகி இருந்தன. நடிகை பவித்ரா, ஏற்கனவே இரண்டு முறை திருமணம் செய்து விவாகரத்துப் பெற்றவர். பவித்ராவை, நரேஷ் திருமணம் செய்து கொண்டதாக செய்தி பரவியதை அடுத்து, நடிகர் நரேஷ் தரப்பு அதை மறுத்திருந்தது.

இந்நிலையில், நடிகை பவித்ரா, மைசூரு சைபர் குற்றப்பிரிவு போலீஸில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், தனது பெயரில் முகநூல் பக்கத்தைப் போலியாக உருவாக்கி, அதில் தவறானத் தகவல்களை மர்மநபர்கள் பதிவேற்றி வருவதாகவும், தனது புகழுக்கு களங்கம் ஏற்படுத்த இவ்வாறு செயல்பட்டு வருவதாகவும், இதனால் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in