மின்விசிறியில் தூக்கு போட்டு நடிகை தற்கொலை: ரசிகர்கள் அதிர்ச்சி

மின்விசிறியில் தூக்கு போட்டு நடிகை தற்கொலை: ரசிகர்கள் அதிர்ச்சி

பிரபல வங்காள நடிகை பல்லவி டே (Pallavi Dey). பல சின்னத்திரை தொடர்களில் நடித்துள்ள இவர் அம்மாநிலத்தில் பிரபலமானவர். கொல்கத்தா அருகில் உள்ள கர்ஃபா பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்தார். இன்று காலை நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால், அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்தனர். அவர் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அவரைக் கொண்டுச் சென்றனர். பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். விசாரணை நடத்திவரும் போலீஸார் இதை தற்கொலையாக இருக்கலாம் என்று தெரிவித்திருக்கின்றனர்.

நடிகை பல்லவியும் அவர் காதலர் சங்னிக் சக்கரவர்த்தியும் திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்ந்துவந்தனர். அவர்களுக்குள் ஏதும் பிரச்சினையா, அதன் காரணமாக அவர் தற்கொலை செய்துகொண்டாரா என்பது போலீஸார் விசாரித்து வருகின்றனர். பல்லவியின் மறைவை அடுத்து ரசிகர்களும் சின்னத்திரை பிரபலங்களும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in