
நடிகர் ஆதிக்கும், நடிகை நிக்கி கல்ராணிக்கும் விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே நடிகர் ஆதியும், நடிகை நிக்கி கல்ராணியும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டு வந்தது. அதை மெய்பிக்கும் வகையில் தற்போது, இரண்டு பேரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தனது நெருக்கமான குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்த விழாவை நடத்த இருவரும் முடிவு செய்துள்ளதாகவும், அதற்கான ஏற்பாடுகள் ஏற்கெனவே நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.