முதன்முறையாக நடிகை நயன்தாரா செய்த காரியம்: வைரலாகும் போட்டோ

வைரலாகும் போட்டோ
வைரலாகும் போட்டோமுதன்முறையாக நடிகை நயன்தாரா செய்த காரியம்: வைரலாகும் போட்டோ

குழந்தையைத் தூக்கி வைத்துள்ளவாறு நடிகை நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் பிரபல நடிகையான நயன்தாரா கடந்த ஆண்டு இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் நடந்து நான்கு மாதங்களிலேயே தங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது என அறிவித்தனர். வாடகைத்தாய் மூலம் தான் இந்த இரட்டை குழந்தைகளை இவர்கள் பெற்றுக்கொண்டனர் என்று அதன்பின் தெரியவந்தது.

இந்த நிலையில், தங்களது இரட்டை குழந்தைகளின் புகைப்படங்களை அவ்வப்போது சமூக வலைதளங்களில் இருவரும் வெளியிட்டு வந்தனர். ஆனால், குழந்தைகளின் முகத்தை மறைத்து தான் அப்போது அவர்கள் புகைப்படங்களை வெளியிட்டு வந்தனர்.

ஆனால், தற்போது முதல் முறையாக குழந்தையின் முகத்தைத் தெளிவாக காட்டும் படியான புகைப்படத்தை நயன்தாரா, விக்னேஷ்சிவன் இணை வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. இந்த நிலையில் இது நயன்தாராவின் குழந்தை இல்லை என்றும் தற்போது தெரிய வந்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in