நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் நடிகை நயன்தாரா நடித்திருக்கும் ‘அன்னபூரணி’ படம் டிசம்பர் 1 அன்று வெளியாகிறது.
இதில் நயன்தாரா செஃபாக நடிப்பதால் பேன் ஃபிளிப்பிங், டாஸ்சிங் மற்றும் பல நுணுக்கங்களையும் சரியாக கற்றுக் கொண்டுள்ளார்.
இதில் ஏமாற்றும் விதமாகவோ அல்லது டூப் போட்டோ எந்தக் காட்சியும் எடுக்கவில்லை எனப் படக்குழு கூறியுள்ளது.
சில நாட்களில் பத்து மணிக்கு முடிந்துவிட வேண்டிய படப்பிடிப்பு நள்ளிரவு 12 மணி வரைகூட நீட்டிக்கப்பட்டுள்ளது.
தன்னுடைய வேலைகளைக் கூட பொருட்படுத்தாது படத்திற்காக அதிகாலை 5 மணி வரை கூட அவர் இருந்திருக்கிறார்.
இப்படத்தில் ஜெய், சத்யராஜ், கே.எஸ்.ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி, அச்யுத் குமார், குமாரி சஞ்சு, ரேணுகா, கார்த்திக் குமார், சுரேஷ் சக்கரவர்த்தி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தின் வெளியீட்டுத் தேதி டிசம்பர் 1 என்பதை படக்குழு தற்போது உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும், படத்தின் வொர்க்கிங் ஸ்டில்ஸையும் வெளியிட்டுள்ளனர்.